இந்தியா எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது! இந்திய செய்தியாளர்களின் முகத்தில் அறைந்த தமிழ் மக்கள்

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_4396.html

இந்தியா எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. இவ்வாறு நேரடியாகவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியாப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் கருத்துத் தெரிவித்ததாக இந்தியாவின் பிரபல தமிழ் செய்திச் சேவையான புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் கடந்த எட்டு நாட்களாக சுற்றுப்பயனம் மேற்கொண்ட புதிய தலைமுறை ஊடகவியலாளர்கள் அங்குள்ள தமிழ் மக்கள் வெளியிட்ட கருத்துக்களைப் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
அங்குள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களின் சாராம்சம் வருமாறு,
இறுதிப்போர் இடம்பெற்ற போது இந்தியா தலையிட்டு பேரழிவுகள் இடம்பெறாமல் தடுக்கும் என்று எதிர்பார்த்தோம். இந்தியா எங்களுக்கு தேவையான நேரத்தில் உதவவில்லை.
இந்தியாவே இறுதிப்போரில் நேரடியாக உதவியது என்பதனை நினைக்கும் போது மிக்க வேதனையாக இருக்கின்றது.
இதனால் இந்தியா மீதோ இந்தியாவின் எந்த அரசியல்வாதி மீதோ எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. எங்களின் பிரச்சினையில் இனியும் தலையிடாமல் எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்.
இந்தியாவிலிருந்து வந்து எங்களைப் படம்பிடிப்பதையும், எங்கள் நிலைமைகள் தொடர்பாக செய்தி சேகரிப்பதையும் நாங்கள் வெறுக்கிறோம்.
குறித்த செய்திச் சனலுக்கு பேட்டியளித்த டக்ளஸ் தேவானந்தா,
உரிமைகளை சிங்களவர்களுக்கு தங்கத்திலும் தமிழர்களுக்கு தகரத்திலும் கொடுக்க மாட்டோம். அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படும் என்கிறார் டக்ளஸ்.
