பொட்டு அம்மானின் புலனாய்வுக்கு ஏற்பட்ட மாபெரும் தோல்வி! - பிரபாகரனுக்காக கண்ணீர் வடிக்காத இந்திய பத்திரிகைகள்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா உடைகின்றமையை தடுக்கத் தவறியது அந்த இயக்கத்தின் புலனாய்வுத் துறைக்கு ஏற்பட்ட வெளிப்படையான தோல்வி என்று இந்தியாவைச் சேர்ந்த அவதானிகள் அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கின்றார்கள்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் வீ. நாராயணன், சன். ரி. வி தொலைக்காட்சியின் பிரதம செய்தி ஆசிரியர் ஏ. எஸ். பன்னீர்செல்வம், ஃபொரொன்ற் லைன் சஞ்சிகையின் விசேட செய்தியாளர் ரி. எஸ். சுப்பிரமணியம் ஆகியோர் இக்கருத்தை தூதரக அதிகாரிகளுக்கு முன்வைத்து இருக்கின்றார்கள்.

இது புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்டு இருக்கின்ற பாரிய விழுக்காடு, புலிகள் இயக்கத்தின் முழுக் கட்டமைப்பும் ஒட்டுமொத்தமாக சிதைந்து விட்டது, கருணா பிரிந்து செல்கின்றமையை தடுக்க தவறியது இயக்கத்தின் புலனாய்வுத் துறைக்கு ஏற்பட்ட வெளிப்படையான தோல்வி என்று பேராசிரியர் வீ. நாராயணன் கூறி இருக்கின்றார்.

புலிகள் இயக்கத்தின் புகழ் பெற்ற புலனாய்வுப் பிரிவு கருணாவின் பிரிவை அனுமானிக்கத் தவறியது பெரும் ஆச்சரியத்தைத் தருகின்றது என பன்னீர்செல்வம் முக்கியமாக குறிப்பிட்டு இருக்கின்றார்.

கருணாவின் பிரிவை அனுமானிக்கத் தவறியமையால் பொட்டு அம்மானின் உயிர் புலித் தலைமையால் பறிக்கப்படலாம் என்று எதிர்வு கூறி இருக்கின்றார் சுப்பிரமணியம்.

துணைத் தூதரகத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விபரங்கள் கிடைக்கப் பெற்று உள்ளன
பிரபாகரனுக்காக கண்ணீர் வடிக்காத இந்திய பத்திரிகைகள்!!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் மரணச் செய்தி இந்திய ஊடகங்களுக்கு கண்ணீரை ஏற்படுத்தி இருக்கவில்லை என்று டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிவருகின்ற முக்கிய பத்திரிகைகளில் இலங்கை யுத்தம் முடிவுக்கு வந்தமை தொடர்பாக வெளியான ஆசிரியர் தலையங்கங்களை கவனமாக படித்த பிற்பாடு தூதரகம் இந்த அவதானத்தை வெளிப்படுத்தி இருக்கின்றது.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்ததை இந்திய ஊடகங்கள் பெரிதும் வரவேற்று உள்ளன என்றும் புலிகள் இயக்கத்துக்காகவோ, வே. பிரபாகரனுக்காகவோ கண்ணீர் வடித்து இருக்கவில்லை என்றும் இந்த இராஜதந்திர ஆவணத்தில் கூறப்பட்டு உள்ளது.

ஆனால் தமிழர்கள் விடயத்தில் இலங்கை அரசு மிகவும் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டி உள்ளன என்றும் இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

குறிப்பாக தமிழர்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனவாழ்வு, அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வு ஆகியவற்றில் இலங்கை அரசு அக்கறையுடன் என்று பத்திரிகைகள் வலியுறுத்தி உள்ளன என்றும் இதில் சுட்டுக் காட்டப்பட்டு உள்ளது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item