இடைவிடாது புஷ் அப் செய்து அசத்திய ஒபாமாவின் மனைவி!
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_1921.html

அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவின் மனைவி ஒரு தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் நபர் என்று தெரிய வந்துள்ளது.
மிச்சேல் ஒபாமா அமெரிக்காவில் சுகாதாரத் திட்டங்களை விரிவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாக கலிபோர்னியா மாகாணத்துக்கு சென்றிருந்தார்.
அங்கு அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் push-up செய்யும் போட்டியில் கலந்து கொண்டார்.
குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடாத்தும் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளரான Ellen அவர்களினால் மிச்சேல் ஒபாமாவிடம் எத்தனை push-up கள் செய்வீர்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் இடைவிடாது முப்பது தடவைகள் செய்து காட்டியமை குறிப்பிடத்தக்கது.


