கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க படையினருக்கு பயமாம்

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_1093.html

கருணா குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்தினர் அஞ்சுகின்றனர் என்றும் அமெரிக்காவின் கொழும்புத் தூதரக அதிகாரிகளுக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம். இளஞ்செழியன் தெரிவித்து இருக்கின்றார்.
தூதரகத்தில் இருந்து 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 03 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இது சம்பந்தப்பட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.
கருணா குழுவினர் வடக்கு, கிழக்கில் பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர், ஆனால் இவர்களுக்கு மீது நடவடிக்கை எடுக்க படையினருக்கு பயமாம். அரச எதிர்ப்பாளர்கள் என்றோ ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் என்றோ முத்திரை குத்தப்படலாம் என்பதே இவர்களின் அச்சம்.
எனவே பொதுமக்கள் மீது கருணா குழுவினர் தாக்குகின்றபோது அதில் தலையிடுகின்றமைக்குப் படையினர் தயங்குகின்றனராம். ஆனால் சிவிலியன்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் குறித்து முழு விசாரணைகளை நடத்துகின்றார்கள் இல்லை, குறிப்பாக கப்பம் பெறுதல் போன்ற குற்றச்சாட்டுக்களை இரவு 6.00 மணிக்கு பின்னர் வெளியில் வந்து விசாரிக்க அஞ்சுகின்றனர் என்று தெரிவித்து இருக்கின்றார் இளம்செழியன்.
6.00 மணிக்கு பிறகு என்றால் பொலிஸாருக்கு கிளோமோர் பயம் என்றும் இதனால் பொதுமக்களை சந்தேகிக்கின்றனர் என்றும் தொடர்ந்து சொல்லி இருக்கின்றார்.