வெள்ளைக் கொடியுடன் வருகின்ற பிரபாகரனை கொல்ல மறுத்த சீக்கியர்கள்!
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_1160.html

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனை சுட்டுக் கொல்லுங்கள் என்று இந்திய அமைதி காக்கும் படையினருக்கு உத்தரவிட்டு இருந்தார் ராஜிவ் காந்தி.
இந்தியப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்றுக் கொண்டு இருந்த காலம். 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத நடுப் பகுதியில் பலாலியில் ஒரு பேச்சு இடம்பெறுவதாக இருந்தது. இப்பேச்சில் கலந்து கொள்ள பிரபாகரன் பலாலிக்கு வருவார் என்றும் இருந்தது.
இந்நிலையில் பேச்சுக்கு வருகின்ற பிரபாகரனை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று ராஜிவ் காந்தி உத்தரவிட்டு இருந்தார். அதாவது இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் சண்டை ஆரம்பம் ஆகின்றமைக்கு முன்பாகவே இவ்வுத்தரவை பிறப்பித்து இருக்கின்றார்.
இந்திய அமைதிப் படை தளபதியாக இருந்தவர் லெப். ஜெனரல் தீபந்தர் சிங். இன்னொரு அதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிக்கிரத் சிங்.
ராஜிவ் காந்தியின் உத்தரவு இந்திய உயர் ஸ்தானிகராக இருந்த ஜே. என். டிக்சிற் மூலம் தொலைபேசியில் ஹரிக்கிரத் சிங்குக்கு அறிவுறுத்தப்பட்டது.
1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் 14/15 இரவு தூதுவர் தொலைபேசி அழைப்பு விடுத்து இருக்கின்றார். பிரபாகரன் கூட்டத்துக்கு வருகின்றபோது கைது செய்து விடுங்கள் அல்லது சுட்டுக் கொன்று விடுங்கள் என்று டிக்சிற் ஹரிக்கிரத் சிங்குக்கு சொல்லி இருக்கின்றார்.
ஆனால் முழுப் படைக்கும் தளபதியான லெப். ஜெனரல் தீபந்தர் சிங்குடன் பேசி விட்டு பதில் சொல்வார் என்று தூதுவருக்கு சொன்னார் ஹரிக்கிரத் சிங்.
மேலதிகாரியுடன் பேசினார் ஹரிக்கிரத் சிங். வெள்ளைக் கொடியுடன் பேச வருபவர்களை முறையான இராணுவத்தினர் புறமுதுகில் சுட மாட்டார்கள் என்று தூதுவருக்கு சொல்லச் சொன்னார் தீபந்தர் சிங்.
தூதுவருடன் மீண்டும் பேசி இருக்கின்றார் ஹரிக்கிரத் சிங். மேலதிகாரியின் தகவலை தூதுவருக்கு தெரியப்படுத்தி பிரபாகரனை சுட மாட்டார் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதலில் காணப்படுகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக பேசி தீர்வு காணத்தானே பிரபாகரன் அமைதிப் படையினரின் அழைப்பின் பேரில் வருகின்றார் என்று தூதுவருக்கு சுட்டிக் காட்டி இருக்கின்றார்.
ராஜிவ் காந்திதான் பிரபாகரனை படுகொலை செய்கின்றமைக்கு இவ்வறிவுறுத்தல்களை அவருக்கு தந்திருக்கின்றார் என்றும் இவ்வுத்தரவை மீறுகின்ற பட்சத்தில் அமைதிப் படையினரும், தளபதி ஹரிக் கிரத் சிங்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்று பதிலுக்கு கடுப்பாக சொல்லி இருக்கின்றார் தூதுவர்.
தளபதி ஹரிக் கிரத் சிங் பிந்திய நாட்களில் சுயசரிதை நூல் ஒன்றை எழுதி உள்ளார். இதில் இவ்விடயங்களை விலாவாரியாக குறிப்பிட்டு இருக்கின்றார்.
சர்வதேச பிரசித்தி வாய்ந்த இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்கவில்லை என்பதால் பிரபாகரனுக்கு ஒரு பாடம் கற்பித்தே ஆக வேண்டும் என்று ராஜிவ் காந்தி கறுவிக் கொண்டிருந்தார் என்று ராஜிவ் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பின்னைய நாட்களில் ஒப்புக் கொண்டு உள்ளார்கள்.



