முள்ளிவாய்க்கால் விடுதலைப் போரின் முடிவல்ல அதுவே ஆரம்பம் என்பதை எடுத்துரைப்போம் பேரணியாய் ஓரணியில் வாருங்கள். 7வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைப்பயணம்.


Walk For Justiceஇலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதத்தால் அடிமைகளாக்கப்பட்டுள்ள தமிழினத்திற்கு நிரந்தரமானதும் நிம்மதியானதுமான வாழ்வுக்கு சர்வதேச சமூகம் வழிசமைக்க வேண்டும் என்று நீதி கோரி பெல்ஜியத்திலிருந்து பனிபடர்ந்த வீதி வளியே ஆரம்பிக்கப்பட்ட நடைப்பயணம் இன்று 7வது நாளாகவும் தொடர்கின்றது.
இன்று 32 கிலோமீற்றர் தூரம் வரை நடைப்பயணம் தொடர்ந்தது. காலநிலை ஒரளவு சாதகமாக இருந்த போதிலும் மேட்டுநில வீதிகளுடாக இவர்களது பாதங்கள் நடைபோட்டதால் கால்கள் வீங்கிய நிலையிலும் மனம் தளராது தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.
தமிழீழ மக்கள் தமது அரசியல் விருப்பங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ஐநாவின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட வேண்டும் இதில் புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்றைய பயணம் தொடர்ந்தது.
தமிழினம் காலம் காலமாய் நசுக்கப்படுவதை சர்வதேச சமூகம் நன்கு அறிந்திருந்த போதிலும் மௌனமாக இருப்பது ஏன்?? சர்வதேசமே உன் அமைதியை கலைத்து ஒடுக்கப்படும் தமிழ் இனத்திற்கு விடிவைப் பெற்றுத்தரவேண்டும். இந்த உரிமைக் கோசத்தை மார்ச் 5ம் திகதி ஐநா முன்றலில் ஒருமித்த குரலில் ஓங்கி ஒலிப்போம் சனத்திரளாய் வாருங்கள்.

அழிவுகளும் அடக்கு முறைகளும் தமிழ் இனத்திற்கு புதிதல்ல விழ விழ எழுவோம் முள்ளிவாய்க்கால் விடுதலைப் போரின் முடிவல்ல அதுவே ஆரம்பம் என்பதை எடுத்துரைப்போம் பேரணியாய் ஓரணியில் வாருங்கள்.
 

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item