10,14 வயது சிறுவர்களுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 23 வயது இளைஞன் !!

http://besttamillnews.blogspot.com/2011/10/1014-23.html
இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கிரவுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாகல - போபிட்டிய பகுதி வீடொன்றில் வைத்து 10 மற்றும் 14 வயது சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவர்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற 23 வயதுடைய இளைஞன் அவர்களுக்கு ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பிக் காட்டி இக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.
இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக கிரியெல்ல பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டு குறித்த சந்தேகநபரான 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சந்தேகநபர் குளியாபிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிரியுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.