‘பவரு... பட்டையைக் கிளப்பீட்டிங்க!’ எ பாராட்டு பை ரஜினி

ஒருமுறை... ஒரே ஒருமுறை 'பவர் ஸ்டார்’ சீனிவாசனை நேரில் சந்தித்துவிடுங்கள். அது தமிழ்நாட்டின் பவர்கட் அளவுக்கு சிக்கலானது... சிரமமானது.

அடிக்கடி தன் மொபைல் நம்பர் மாற்றிவிடுவார் பவர். நூல் பிடித்து நூல் பிடித்து அவரது புது எண் பிடித்துப் பேசினாலும், 'என்னது, பவர் ஸ்டாரா... அப்படிலாம் யாரும் இல்லியே...’ என்று அவரே கரகர குரலில் பதில் சொல்லி கட் செய்துவிடுவார். ஆனால், 3டி ஸ்பெஷலில் வாழும் வரலாறான பவர் இடம் பெறாவிட்டால், பின்னர் வரும் சந்ததியினர் வருங்காலத்தில் கலாய்ப்பார்களே என, பவரைத் தேடினோம்.

பண மோசடி, வாகன மோசடி எனத் தொடர்ந்து நான்கு வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் பவர், ''நான் வெளியாளுங்க யாரையும் பார்க்கக் கூடாதே... சரி... பிஸியா ஷூட்டிங் போய்ட்டு இருக்கு. ஏவி.எம். வாங்க.... பார்க்கலாம்!'' என்று நேரம் குறித்தார்.

பவர் சொன்னபடி, ஏவி.எம்-மில் காலை 9.30க்கு ஆஜர். 'எங்க சார் இருக்கீங்க?’ எனப் பலமுறை விசாரித்தும் 11 மணி வரை பதிலும் வரவில்லை; ஆளும் வரவில்லை. திடுமென லைனுக்கு வந்தவர், ''அண்ணா நகர்ல ********** கடைக்குப் பக்கத்துல (அவரது பாதுகாப்புக் கருதி சில இடங்களின் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன.) இருக்கேன். அங்கே வந்துருங்க!'' என்று சொல்லிவிட்டு, 'உளவுத் துறை’ அந்த அழைப்பை டிரேஸ் செய்ய நேரம் கொடுக்காமல், கட் செய்தார்.

உடனே வடபழனியில் இருந்து அண்ணா நகருக்குப் பறந்தோம். அங்கே சென்று அழைத்தால், பதில் இல்லை. இன்னொரு புது எண்ணிலிருந்து ஒரு நபர் பேசினார். 'பவர் அண்ணே... திருமங்கலம்கிட்ட இருக்குற  ஹோட்டல்ல இருக்கார். அங்கே போங்க’ என்பது தகவல்!

அந்த ஹோட்டலுக்குச் சென்றால், அங்கும் ஆளைக் காணோம். கடுப்புடன் அழைத்தால், ''எங்கே தம்பி இருக்கீங்க?'' என்று கூலாக விசாரித்தார் பவர்.


''சார்... உங்காளு சொன்ன ஹோட்டல் வாசல்லதான் நிக்கிறேன்... நீங்க எங்கேதான் இருக்கீங்க?''

''அந்த ஹோட்டலுக்கு லெஃப்ட்ல ஒரு தண்ணி லாரி நிக்குதா?''

''ஆமா!''

''அது பக்கத்துல வரிசையா கார் நிக்குதா?''

''ஆமா!''

''அந்த காரை எல்லாம் தாண்டி வாங்க. லைனை கட் பண்ணிடாதீங்க!''

கார்களைத் தாண்டிக்கொண்டே, ''சார் காரை எல்லாம் தாண்டிட்டேன்!''

''கறுப்பு கலர் கார் ஒண்ணு நிக்குதுல... அதைத் தாண்டி வாங்க!''

வெறியாகக் கிளம்பிய கோபத்துடன் கறுப்பு கார் பக்கம் போனால், படக்கென்று அந்த கார் கதவு திறந்து ஒரு கை என்னை உள்ளே இழுத்தது.

காருக்குள்.... அதே தவுசண்ட் கிராம் பவுடர் பிரகாசத்துடன், தன் டிரேட் மார்க் சிரிப்புடன் பவர்!

''வணக்கம் தம்பி!'' என்று கும்பிடு போட்டு நம் கோபத்தை எல்லாம் காணாமல் போகச் செய்கிறார்.


Related

செய்தி 7476613750614538416

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item