11 மற்றும் 6 வயது இளைய சகோதரிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய அண்ணன்!



குடும்பத்தில் மூத்த சகோதரன் தனது இரு இளைய சகோதரிகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்வமொன்று தொம்பே பகுதியில் பதிவாகியுள்ளது.
இதில் வெட்கித் தலைகுனிய வேண்டிய வேடிக்கை என்னவென்றால் பாலியல் துன்புறுத்தலை மேற்கொண்ட சகோதரருக்கு 17 வயது என்பதோடு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட அவரது இரு சகோதரிகளுக்கும் வயது முறையே 11 மற்றும் 6 ஆகும்.

தொம்பே - மாலித - கப்புகொட பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து நேற்றைய தினம் தொம்பே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

11 வயது சகோதரியை கடந்த ஒரு வருட காலமாகவும் 6 வயது சகோதரியை இம்மாதமும் குறித்த சகோதரன் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரை கைது செய்ய தொம்பே பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item