விடுதியில் விபச்சாரம்! கிளர்ந்தெழுந்த இளைஞர்களால் தாக்கப்பட்ட உரிமையாளர்!!




யாழ் கொழும்புத்துறை பிரதேசத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் உரிமையாளர் அண்மையில் இனந்தெரியாதொரால் சரமாரியாக கத்தி வெட்டுக்கு இலக்கானார். இனம் தெரியாதோரின் தாக்குதல் என்று சொல்லுவதை விட தமிழ் பண்பாட்டைப்

பேணும் இனம் தெரியாதவர்களின் தாக்குதல் என்றே சொல்லலாம்.

இச்சம்பவம் பற்றிதெரியவருவதாவது

கொழும்புத்துறையில் சுற்றிலா பயணிகளுக்கு தங்குமிடம் கொடுக்கும் விடுதி ஒன்றில் யாழில் உள்ள இளைஞர் யுவதிகளின் தேவைகளுக்கும் அறைகள் வழங்கப்படுகிறது. இதனை அவ்விடத்தில் வசிக்கும் மக்கள் கண்டித்துள்ளனர்.

விடுதி உரிமையாளருக்கு அவர்களின் கண்டிப்பை விட காசு மட்டுமே கண்ணுக்கு தெரிந்துள்ளது. அவர் தொடர்ந்து இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன் விளைவாக இனந்தெரியாதோர் இரவு வேளை சரமாரியாக கத்தி கொண்டு பாடம் புகட்டியுள்ளனர். இதன் முக்கிய விடயமாக இவர் அலறிய போதும் அவ்வூர் பிரதேச வாசிகள் எவரும் உதவிக்கு வரவில்லை.
அனைவரும் வேடிக்கையே பார்த்துள்ளனர். இச் சம்பவம் சுமார் இரவு 7.40 மணியளவில் நடைபெற்றுள்ளது. வேட்டுக்கு இலக்கான நபர் தனது தொலைபேசியின் மூலம் தனது வீட்டிற்கு தெரியப்படுத்திய பின்பே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மக்கள் பண்பாட்டுக்கு இலக்கணமாக திகழ்ந்த மக்கள் குறிப்பிட்டு சொல்லப் போனால் பல நாட்டு மக்களே யாழ்ப்பாணத்தின் பண்பாட்டை பெருமையாகக் கூறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியை வெளியிடுவதால் எமது யாழ்ப்பாணம் கலாச்சார சீரழிவு ஏற்படுகின்றது என்று நாம் சொல்லவில்லை இனியும் இவ்வாறான சம்பவம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே மக்களை விழிப்பூட்டும் செய்தியாக வெளியிட்டுள்ளோம்.

குறிப்பிட்ட விடுதியாளரின் நலன் கருதி அவரின் பெயர். விடுதியின் பெயர் என்பவற்றை தணிக்கை செய்துள்ளோம். ஆயினும் இவ்வாறான செயற்பாடுகள் அதிகரிக்குமாயின் அவரின் பெயர். விடுதியின் பெயர் அகியவற்றை வெளியிடுவோம்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item