கருணாவுக்கு கள்ளப் பாஸ்போட் வழங்கியது இலங்கை: பிளேக் அதிரடித் தகவல் !


புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து பின்னர் அவர் பிரித்தானியா வந்து பொலிசாரிடம் சிக்கிக்கொண்ட விடையம் யாவரும் அறிந்ததே. பிரித்தானியச் சிறையில்அவர் இருக்கும்போது தமிழர் ஒருவரால் கருணா தாக்கப்பட்டார் என்பது ஒரு புறம் இருக்க அவர் பிரித்தானியாவுக்கு எவ்வாறு வந்தார் என்ற சுவாரசியமான செய்திகளும் வெளியாகியுள்ளது. இலங்கைக்கான முந் நாள் அமெரிக்கத் தூதுவர் திரு ரோபேட் ஓ பிளேக் அவர்கள் தமது அமெரிக்க தலைமைச் செயலகத்துக்கு இது தொடர்பாக அனுப்பியுள்ள பாதுகாப்புத் தகவலில் பல விடையங்களைக் குறிப்பிட்டுள்ளார். இதனை விக்கி லீக்ஸ் ஊடாக அதிர்வு இணையம் பெற்று வெளியிடுகிறது. கேபிள் இலக்க இரகசிய குறியீடு:07COLOMBO152 

இலங்கையில் இருந்து கருணா பிரித்தானியா செல்லவேண்டும் எனவும் அவருக்கு விசா வழங்குமாறும் இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை இலங்கை வெளிநாட்டு அமைச்சு கோரியுள்ளது. இதில் அமைச்சர் போகொல்லாகம நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளார். பின்னர் அது சரிவராது என்று தெரிந்துகொண்ட வெளிநாட்டமைச்சு கோகில்ல குணவர்த்தன என்ற சிங்களப் பெயரில் ஒரு ராஜதந்திரிகளுக்கான பாஸ்போட்டை தயாரித்துள்ளார்கள். அந்த கள்ளப் பாஸ்போட்டில் கருணாவின் படத்தை இணைத்து பிரித்தானிய தூதுவராலயத்தில் கொடுத்து விசாவைப் பெற்றுள்ளனர். பின்னர் பிரித்தானியாவில் நடைபெறவிருந்த பருவநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் கலந்துகொள்ள என அவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை கோகில்ல குணவர்த்தன என்பவர் ஒரு இராணுவச் சிப்பாய் எனவும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்ற தகவல்களை இலங்கையில் உள்ள பிரித்தானியத் தூதரகம் அறிந்துள்ளது. இருப்பினும் விசா ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதால் அவர்கள் பிரித்தானியாவில் உள்ள எல்லை முகவர் நிலையத்துக்கு இச் செய்தியை அவசரமாக அனுப்பியுள்ளனர். இதனால் பிரித்தானியாவுக்குள் நுளையும் அனைத்து எல்லைப் பிரிவுகளிலும் கோகில்ல குணவர்த்தனவின் பெயர் அதி உச்ச தேடப்படும் நபர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாம். குறித்த தினத்தில் விமானம் மூலம் லண்டன் வந்த கருணா இதனூடாகவே கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் கைதுசெய்யப்பட்டு பல மணி நேரமாகிய பின்னரும் கூட கருணா தாம் தான் கோகில்ல குணவர்த்தன என அடம்பிடித்துள்ளார். பின்னர் இமிகிரேஷன் முகவர்கள் பல ஆவணங்களைக் கொண்டு வந்து கருணா முன்பாகப் போட்டுள்ளனர். 

இலங்கை அரசு இவ்வாறு ஒரு கள்ளத்தனத்தில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் போகொல்லாகம இதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வெளிநாட்டு அமைச்சு இவ்வாறு ஒரு காரியத்தில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார். விக்கி லீக்ஸ் குறிப்புகள்:

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item