தமிழ் புலிகளை கொன்று கடலுக்குள் எறியும் மஹிந்தரின் சிங்கங்கள்!
https://besttamillnews.blogspot.com/2012/01/blog-post_28.html
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மற்றும் அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்படுகின்றவர்கள் மீது நீதிக்கு புறம்பான வகையில் நடவடிக்கைகள்எடுக்கின்றமைக்காக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குள் சிங்கக் குட்டிகள் என்கிற அணியை மஹிந்த அரசு வைத்திருக்கின்றது என அமெரிக்காவுக்கு மிகவும் நம்பிக்கையான வட்டாரம் மூலம் தகவல் கிடைத்து உள்ளது.
மஹிந்த அரசில் அங்கம் வகித்தவரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இத்தகவலை அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக்குக்கு சொல்லி இருக்கின்றார்.
பிளேக் – மங்கள சந்திப்பு 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதி சமரவீரவின் இல்லத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் மஹிந்த அரசின் போக்குக் குறித்து காரசாரமான கருத்துக்களை சொல்லி இருக்கின்றார் மங்கள.
மஹிந்த அரசின் கொள்கைகள் மதிப்பும் மரியாதைக்கும் உரிய தமிழர்கள் பலரை விடுதலைப் புலிகளை நோக்கி செல்ல வைக்கின்றனவாக உள்ளன, ராஜபக்ஸ தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றமைக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அதிகாரப் பரவலாக்கலுக்கு பிரச்சினை இருக்கவில்லை, கடந்த காலங்களில் பல தீர்வு யோசனைகள் மேசையில் இருந்தன, ஆனால் தற்போதைய உண்மையான பிரச்சினை அரசியல் அதிகாரம் என்பதுதான், ஒரு கையில் அரசிடம் இயந்திரத் துப்பாக்கி இருக்குமாக இருந்தால் மறு கையில் தீர்வு யோசனை இருக்க வேண்டும், மஹிந்த ராஜபக்ஸ தற்போதைய உயர் அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் என்று மங்கள ஒரு குட்டிப் பிரசங்கமே நடத்தி இருக்கின்றார்.
ஆனால் ஜனாதிபதி மஹிந்தரிடமோ, மஹிந்தரின் ஆலோசகர்களிடமோ சமாதானத்தை அடைகின்றமைக்கான உண்மையான நீண்ட கால செயல் திட்டம் கிடையாது என்றும் முன்வைத்து இருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை கடத்துதல், துன்புறுத்துதல் போன்ற இராணுவ தந்திரங்கள் மூலம் கொழும்பின் பாதுகாப்பு அதிகரிக்கின்றது, புலிகளின் வலையமைப்பு சிதைக்கப்படுகின்றது என ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் நம்புகின்றனர் என தெரிகின்றது என்று தூதுவர் பிளேக் கருத்துச் சொல்லி இருக்கின்றார்.
சிங்கக் குட்டிகள் என்கிற அணியை இந்நடவடிக்கைகளுக்காக அரசு வைத்திருக்கின்றது என தூதுவருக்கு உறுதிப்படுத்தினார் மங்கள.
கொழும்பில் அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் தமிழ். சி. என். என் இற்கு இத்தகவல்கள் கிடைத்து உள்ளன.
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அனுமதியுடன் இராணுவ தளபதி சரத் பொன்சேகா விசேட அணி ஒன்றை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குள் உருவாக்கினார் என்றும் இந்த அணி கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களிலும் விடுதலைப் புலிகள் மற்றும் புலி அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை பின் தொடர்கின்றது என்றும் இலங்கையில் பரவலாக நம்ப்ப்படுகின்றது.இக்குழுவைப் போலவே அம்பாந்தோட்டைப் பூனைகள் என்கிற குழு பற்றியும் தூதரகம் அறிந்து வைத்து உள்ளது. புலி ஆதரவாளர்களை பூண்டோடு ஒழிக்க நீதிக்கு அப்பாற்பட்ட வழிமுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என புதிதாக நியமனம் பெற்ற சுற்றாடல் அமைச்சர் பகிரங்கமாக கோரி உள்ளார்.புலிகள் இயக்க உறுப்பினர்கள் மற்றும் அனுதாபிகள் என்று இவ்வாறான குழுவினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்படுவோரின் சடலங்கள் கடலில் வீசப்படுகின்றன என்று மங்கள குறிப்பிட்டு உள்ளார் என்று அமைச்சுக்கு எழுத்தில் விளக்கம் கொடுத்து உள்ளார் தூதுவர்.
மஹிந்த அரசில் அங்கம் வகித்தவரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இத்தகவலை அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக்குக்கு சொல்லி இருக்கின்றார்.
பிளேக் – மங்கள சந்திப்பு 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதி சமரவீரவின் இல்லத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் மஹிந்த அரசின் போக்குக் குறித்து காரசாரமான கருத்துக்களை சொல்லி இருக்கின்றார் மங்கள.
மஹிந்த அரசின் கொள்கைகள் மதிப்பும் மரியாதைக்கும் உரிய தமிழர்கள் பலரை விடுதலைப் புலிகளை நோக்கி செல்ல வைக்கின்றனவாக உள்ளன, ராஜபக்ஸ தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றமைக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அதிகாரப் பரவலாக்கலுக்கு பிரச்சினை இருக்கவில்லை, கடந்த காலங்களில் பல தீர்வு யோசனைகள் மேசையில் இருந்தன, ஆனால் தற்போதைய உண்மையான பிரச்சினை அரசியல் அதிகாரம் என்பதுதான், ஒரு கையில் அரசிடம் இயந்திரத் துப்பாக்கி இருக்குமாக இருந்தால் மறு கையில் தீர்வு யோசனை இருக்க வேண்டும், மஹிந்த ராஜபக்ஸ தற்போதைய உயர் அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் என்று மங்கள ஒரு குட்டிப் பிரசங்கமே நடத்தி இருக்கின்றார்.
ஆனால் ஜனாதிபதி மஹிந்தரிடமோ, மஹிந்தரின் ஆலோசகர்களிடமோ சமாதானத்தை அடைகின்றமைக்கான உண்மையான நீண்ட கால செயல் திட்டம் கிடையாது என்றும் முன்வைத்து இருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை கடத்துதல், துன்புறுத்துதல் போன்ற இராணுவ தந்திரங்கள் மூலம் கொழும்பின் பாதுகாப்பு அதிகரிக்கின்றது, புலிகளின் வலையமைப்பு சிதைக்கப்படுகின்றது என ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் நம்புகின்றனர் என தெரிகின்றது என்று தூதுவர் பிளேக் கருத்துச் சொல்லி இருக்கின்றார்.
சிங்கக் குட்டிகள் என்கிற அணியை இந்நடவடிக்கைகளுக்காக அரசு வைத்திருக்கின்றது என தூதுவருக்கு உறுதிப்படுத்தினார் மங்கள.
கொழும்பில் அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் தமிழ். சி. என். என் இற்கு இத்தகவல்கள் கிடைத்து உள்ளன.
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அனுமதியுடன் இராணுவ தளபதி சரத் பொன்சேகா விசேட அணி ஒன்றை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குள் உருவாக்கினார் என்றும் இந்த அணி கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களிலும் விடுதலைப் புலிகள் மற்றும் புலி அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை பின் தொடர்கின்றது என்றும் இலங்கையில் பரவலாக நம்ப்ப்படுகின்றது.