விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மலையாளியாம் றோவுடன் கூட்டுச்சேர்ந்து இலங்கை புலனாய்வாளர்களின் நாடகம்.
https://besttamillnews.blogspot.com/2012/01/blog-post_9280.html
போர் முடிவுற்ற பின் பல சதி திட்டங்களை தீட்டி புலிகளின் மீள் வருகையை அடியோடு கிள்ளியெறிய வேண்டும் என்று கங்கணம் கட்டி அலையும் இந்திய றோவும் இலங்கை புலனாய்வாளர்களும் சேர்ந்து ஒரு புதிய புரளியை கிளப்பி விட்டுள்ளனர்.
கேரலாவில் வசிக்கும் ஒருவரை பிடித்து இவர் எமது தேசியத்தலைவர் மேதகு.வே பிரபாகரனின் உறவினர் என்றும் தலைவர் அவர்கள் ஒரு மலையாளி என்றும் திரைக்கதை வசனத்தை எழுதி செய்தியாக்கி அதை காணொளியும் எடுத்து வெளியிட்டுள்ளனர்.இந்த நாடகம் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவடைந்து சில நாட்களில் அரங்கேற்றப்பட்டிருந்தது.இது தொடர்பாக அப்போது இந்திய புலனாய்வு பிரிவான றோ ஆடிய நாடகம் எடுபடாமல் தணிந்து போனமையால் அதை இப்போது மீண்டும் இலங்கை புலனாய்வாளர்கள் கையிலெடுத்து கதகடி ஆட எத்தனித்துள்ளமை தெரிகிறது.
கேரலாவில் இருந்து ஜானகி என்ற பெயரில் இந்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஜானகி அம்மா என்றவரின் காணொளி யூ ரூப் இணையத்தில் 27.05.2009 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.அதற்கான ஆதாரத்தையும் இங்கு இணைத்துள்ளோம்.
எனவே 2009 ஆண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்பட சதி வேலையை மீண்டும் இலங்கை புலனாய்வாளர்கள் தற்போது கையிலெடுத்து பழைய சினிமாப்படங்களை புதிய வடிவில் எடுத்து வெற்றிகரமாக ஓட்டுவது போன்று இந்திய புலனாய்வு அமைப்பான றோவால் எடுக்கப்பட்டு தோல்வியடைந்த இந்த சதி திட்டத்தை புதுப்பித்து புலிகளின் தலைவர் மலையாளி என்றும் அவர் ஈழத்தமிழர் இல்லையென்றும் கதையளக்க முயன்றுள்ளனர்.
இனிவரும் காலங்களில் கடற்புலிகளின் தளபதி சூசை,புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் மற்றும் இன்னும் பல முக்கிய தளபதிகளும் மலையாளிகள் என்றோ அல்லது இந்தி காரர்கள் என்றோ செய்தி வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இனிவரும் காலங்களில் கடற்புலிகளின் தளபதி சூசை,புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் மற்றும் இன்னும் பல முக்கிய தளபதிகளும் மலையாளிகள் என்றோ அல்லது இந்தி காரர்கள் என்றோ செய்தி வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
