கஞ்சா வைத்திருந்த பெண் யாழில் கைது!!



யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள நான்காம் வாட்டில் கஞ்சா பைக்கற்றுக்களை தன்வசம் வைத்திருந்த குடும்பப் பெண் ஒருவர் யாழ்.பொலிஸாரினால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குடும்பப் பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட வந்தவர் எனவும் இவரிடம் பல ஆயிரம் ரூபா பெறுமதியான கஞ்சா பைக்கற்றுக்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், அவை பறிமுதல் செய்யப்பட்டள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண், யாழ்.நீதிவான் நீதிமன்றில் இன்று மாலை ஆஜர் படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item