இன்று அதிகாலை பல இலட்சம் பெறுமதியான நகைகள் பணம் மட்டக்களப்பில் கொள்ளை



11 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 3 இலட்சம் ரூபாய் நகைகளை கொள்ளையடித்து சென்ற பாரிய கொள்ளைச் சம்பவமொன்று மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திராய்மடு சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றதாக தலைமையக பொலிஸார் தெரிவித´தனர்.

திராய்மடு சுவிஸ் கிராமத்தில்லுள்ள வீடொன்றிற்கு ஆயுதங்கள் முற்றும் கத்திகளுடன் வந்த மூவர் ஒருவரை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் முச்சக்கர வண்டியை தாருங்கள் எனக்கேட்டு வீட்டின் கதவைத்தட்டிய போது வீட்டுக்காரார்கள் கதவைத்திறந்து வெளியே வர துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை கழுத்தில் வைத்து வீட்டிற்குள் நுழைந்து வீட்டு அலுமாரிகளை உடைத்து பணம் மற்றும் நகைகளைக்கொள்ளையடித்த பின் தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவம்தொடர்பில் தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொணடுள்ளனர்
.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item