ஏதாவதுதொரு சக்தி தலையிட்டு தங்களை காப்பாற்றும் என புலிகள் நம்பினர் என்ன நடந்தது?
https://besttamillnews.blogspot.com/2011/11/blog-post_9560.html
விடுதலைப் புலிகள் அமைப்பு சமாதான யெற்பாடு மற்றும்
அரசியல் தீர்வு விடயங்களில் காட்டிய துளியளவிலான அக்கறையைக் கூட தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிக்காட்டுவதாக தெரியவில்லை. அரசியல் தீர்வு விடயங்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவித அர்ப்பணிப்பும் காட்டாமல் இருந்துவருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்வு விடயத்தில் இதுவரை வெளிக்காட்டிய ஒரு அர்ப்பணிப்பை யாவது குறிப்பிட டியுமா? என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் தமக்கு வாக்களித்த மக்கள் கூறும் விடயங்களை கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சினைகள் என்னவென்பது தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். மாறாக கூட்டமைப்பினர் தம்மையும் ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
வீட்டுக்குள் இருக்கும் நெருப்பை வெளியில் கொண்டு செல்லக்கூடாது. வெளியில் இருக்கும் நெருப்பை வீட்டுக்குள் கொண்டு வரக்கூடாது என கூறப்படுவதுண்டு. விடுதலை புலிகள் அமைப்புக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பல தடவைகள் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்கினார். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்று ஜனாதிபதியின் அழைப்பை புலிகள் ஏற்றிருந்தால் இன்று நிலைமை வேறு விதத்தில் இருந்திருக்கும்.
எனினும் புலிகள் அமைப்பானது இறுதித் தருணத்தில் ஏதாவதுதொரு சக்தி தலையிட்டு தங்களை காப்பாற்றும் என நம்பியது.
ஆனால் இறுதியில் என்ன நடந்தது? இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று என்ன செய்துகொண்டிருக்கின்றது. அதாவது தாங்களும் ஏமாற்றமடைந்து தமிழ் மக்களையும் ஏமாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.
இதேவேளை அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தலையிடக்கூடிய முழுமையான உரிமை இந்தியாவுக்கு இருக்கின்றது என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆனால் இந்தப் பிரச்சினையில் தலையிடுவதற்கு உரிமையைக் கொண்டுள்ள இந்தியாகூட பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு வரவேண்டும் என கூறுகின்றது. ஆனால் அதற்கு தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு ஆதரவு வழங்கவேண்டும். எனினும் இந்த செயற்பாட்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவித அர்ப்பணிப்பும் காட்டாமல் இருந்துவருகின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்வு விடயத் தில் இதுவரை வெளிக்காட்டிய ஒரு அர்ப்பணிப்பையாவது குறிப்பிட முடியுமா? என்று நான் கேள்வி எழுப்புகின்றேன். தீர்வு விடயத்தில் புலிகள் அமைப்பு வெளிக்காட்டிய சிறிதளவு அக்கறையைக்கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளிக்காட்டாமல் உள்ளமை கவலைக்குயதாகும்.
வடக்கு மக்களின் கருத்தைக் கேட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்பட வேண்டும். மாறாக புலம் பெயர் தமிழ் மக்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதை நிறுத்தவேண்டும். கனடாவில் பேசிக் கொண்டிருக்கும் தமிழ் எம்.பி. இலங்கையில் பிறக்காதவர். அதாவது அடுத்த தலை முறையை சேர்ந்தவர். அவர் இலங்கையை விமர்சித்துப் பேசிக்கொண்டிருக்கின்றார். அவற்றைக் கேட்டுக்கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு யெற்படக்கூடாது.
அதாவது இந்த மண்ணில் பிறந்து சிரமங்களை எதிர்கொண்ட மக்கள் என்ன கூறுகின்றார்களோ அதன்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எம்முடன் கலந்துரையாட வேண்டும். அரசாங்கத்துடன் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.
அண்மையில் சர்வதேச அரங்கு ஒன்றில் எமது நாட்டின் அமைசச்ர் ஒருவர் இலங்கையின் நிலைமையை தெளிவுபடுத்தி உரையாற்றியிருந்தார். உடனே அதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எதிர்த்து அறிக்கை விடுத்தார். இவ்வாறான செயற்பாடுகளில் புலிகள் கூட ஈடுபடவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியும் அவ்வாறு செய்ததில்லை. ஆனால் கூட்டமைப்பு அதனை செய்ததது.
அடுத்ததாக தருஷ்மன் அறிக்கை வெளி வந்தததும் அதனை ஆதரித்து அறிக்கை வெளியிட்டனர். தற்போது இடம்பெற்றிருக்கும் அமெரிக்க விஜயம் இந்த வகையில் அமைந்துவிடக்கூடாது என்று நாங்கள் கருதுகின்றோம். அதாவது தீர்வு விடயத் தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பொறுப்புடன் செயற்படவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அன்று எடுக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தினால் 30 வருடங்களை நாங்கள் இழந்தோம். அதாவது இரண்டு தலைமுறைகளை இழந்துவிட்டோம். எனவே எதிர்வரும் காலங்களில் நாங்கள் ஒற்றுமையாக வாழவேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் எம்.பி. சிரேஷ்ட அரசியல்வாதி. அனுபவமிக்கத்த தலைவர். எனவே அனைவரது அனுபவங்களும் அறிவும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு எங்களுக்கு தேவைப்படுகின்றது.
எனவே கூட்டமைப்பினர் இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்பட்டு தமக்கான சந்தர்ப்பங்களை பெற்றுக்கொள்ளவேண்டும். இந்த நாட்டில் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்துவருகின்றனர். அதனை மேலும் பலப்படுத்தவேண்டும் என பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
