செய்தி இணையத்தளங்கள் பதிவு செய்யுமாறு ஊடக அமைச்சு அறிவிப்பு! (2ஆம் இணைப்பு)



ஶ்ரீ லங்கா தொடர்புபட்ட செய்திகளை வெளியிடும் இணையத் தளங்கள் அனைத்தும் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சில் தமது இணைய தளங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில செய்தி இணைய தளங்களில் தனிப்பட்ட நபர்களின் நற்பெயருக்கு களங்களம் ஏற்படக் கூடிய வகையிலான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, இலங்கை அரசாங்கம் மற்றும் முக்கிய பிரபுக்களின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில செய்தி இணைய தளங்கள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடக ஒழுக்க விதிகளுக்கு புறம்பான வகையில் இந்த செய்தி இணைய தளங்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசமான ஊடக பிரசூரங்களை ஊக்குவிக்க முடியாது எனவும், இந்த நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமெனவும் ஊடக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இலங்கைச் செய்திகளை வெளியிடும் சகல இணைய தளங்களும் ஊடக அமைச்சில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொலைதொடர்பாடல் மற்றும் ஊடக ஒழுக்க விதிகளையும் இலங்கை சட்டங்களையும் மதிக்கும் வகையில் செய்தி ஊடகங்கள் பணியைத் தொடர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item