போதையில் நிர்வாணமாக வாகனம் செலுத்திய நபர் கைது!


போதையில் நிர்வாணமாக வாகனம் செலுத்திய நபர் கைது!மதுபோதையில் காரை செலுத்தி 17 கார்களை சேதப்படுத்திய நபரொருவரை நிர்வாண கோலத்துடன் பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இடம்பெற்றுள்ளது. மிகவும் விழிப்புடன் செயற்பட்டு நகர பொலிஸார் மேற்படி நபரை கைது செய்துள்ளனர். விடாலி குரோடி என்ற இந்நபர் வீதி ஒழுங்குகளை மீறி, ஒழுங்கற்ற முறையில் வாகனத்தை செலுத்தியுள்ளதுடன் 17 வாகனங்களை சேதப்படுத்தியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர் செலுத்திச் சென்ற கார் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்தின் மீது மோதுவதிலிருந்து மயிரிழையில் தப்பியது.
இறுதியில், பொலிஸார் அவரை பிடிக்கும்போது அவர் நிர்வாண கோலத்துடன் காரினுள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தான் மகிழ்வின்றி இருப்பதாகவும் தனது காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் வாகனத்தை செலுத்த தீர்மானித்தாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அவர் நிர்வாண கோலத்துடன் வாகனம் செலுத்திய காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டு ரஷ்ய தொலைக்காட்சியொன்றிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. நான் காதல் சிறகுகளுடன் பயணித்தேன். எமது காதல் வாழ்வின் ஒருவருட பூர்த்தி நாளன்று, தீவிரமான வகையில் இந்த உறவை தொடர்வதற்கு தான் தயாரக இல்லையென்று அவள் தெரிவித்துவிட்டாள்’ என்று விடாலி குறோடி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item