75 கோடி வசூல் - 7ஆம் அறிவு முதலிடத்தில்
https://besttamillnews.blogspot.com/2011/11/75-7.html
தீபாவளிக்கு வெளியான படங்களில் 75 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்திருகிறது 7ஆம் அறிவு. ஆனால் விஜயின் வேலாயுதம் 45 கோடியைத் தாண்டமுடியவில்லை. ஏழாம் அறிவு இன்னும் சில தினங்களில் எந்திரனின் வசூலை மிஞ்சிவிடும் என்று ஃபாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்து வரும் சூழ்நிலையில், 7ஆம் அறிவு டீமில் இருந்து முதல் ஆளாக அந்தபடத்தின் ஹீரோவான சூரியா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி கூறினார்.
அவர் பேசும்போது, படம் எவ்வளவு வசூல் செய்து இருக்கிறது என்பதை தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூற வேண்டும். எனது நடிப்பில் வரும் ஒவ்வொரு படத்தின் வசூலையும் அடுத்த படம் தாண்ட வேண்டும் என்று நினைப்பேன்.
அதைப் போல எனது சிங்கம் படத்தின் வசூலை இப்பவே 7ஆம் அறிவு படம் தாண்டி விட்டது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. 7ஆம் அறிவு படத்தில் போதிதர்மன் காஞ்சிபுரத்தில் வாழ்த்தாக காட்டி இருப்போம். அதைப் போலவே தெலுங்கிலும் அப்படித்தான் காட்டி இருக்கிறோம். தேவையில்லாமல் தெலுங்கில் வெளியான படத்தில் குண்டூரில் வெளியானது போல் காட்டி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் நல்ல செய்து இருக்காலமே என்று தோன்றும். முதன் முறையாக ரஜினி சார் வெளியே வந்து பார்த்த படம் ஏழாம் அறிவு. படத்தை பார்த்து பெண்டாஸ்டிக் பிலிம் என்று கட்டிபிடித்து பாராட்டினார்.
நான் டிவிட்டர், பேஸ்புக் இணையத்தில் எல்லாம் இல்லை. இணையத்தில் அனைவரும் வெவ்வேறு விமர்சனங்கள் வந்து இருக்கின்றன. அவ்வளவு நிறை குறைகள் அனைத்தையும் நான் ஏற்கிறேன். இனிமேல் வரலாற்று படங்களில் நடிப்பீர்கள் என்று கேட்கிறார்கள்.
இப்படத்தில் முதல் 20 நிமிட காட்சிகளுக்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. ஒரு பெரிய இயக்குனர் என்னிடம் ஒரு வரலாற்று கதை கூறி இருக்கிறார். இடைவேளை வரை நன்றாக இருந்தது. அதற்கு பிறகு தயார் செய்து வருகிறார். அனைத்தும் நல்ல விதமாக அமைந்தால் அப்படத்தில் நடிப்பேன். எனது படங்களுக்கு நான்தான் கதை கேட்கிறேன். இயக்குனர் வஸந்த் கதை கேட்டு நான் நடித்தால் இன்னும் சந்தோஷப்படுவேன்.விஜய் சார் இன்னும் 7ஆம் அறிவு படத்தினை பார்க்க வில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவரது மனைவிக்கு ஜோ டிக்கெட் கொடுத்து படத்தினை பார்க்க வைத்திருக்கிறார். ஒரு படத்திற்கு என்னமா உழைத்து இருக்கிறீர்கள்?! என்று மெசேஜ் அனுப்பி இருந்தார். சந்தோஷமாக இருந்தது.
நானும் இன்னும் வேலாயுதம் படத்தினை பார்க்க வில்லை. வேலாயுதம் ஒரு மசாலா படம் என்றால் 7ஆம் அறிவு வேறு விதமான படம். எனக்கும் மசாலா படங்களில் நடிப்பது மிகவும் பிடிக்கும். நானும் இதுவரை பல படங்களில் நடித்து இருக்கிறேன். இரண்டு விதமான படங்களும் மாறி மாறி செய்ய வேண்டும் என்று நினைப்பேன். மாற்றான் படத்தினை தொடர்ந்து மசாலா படத்தில் தான் நடிக்க இருக்கிறேன்.
‘மாற்றான்’ படத்தில் ஒரு உருவம் இரண்டு தலை உள்ள ஒருவனாக நடிக்கிறேனா என்று கேட்கிறார்கள். அதை பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது. கோடை விடுமுறைக்கு இந்தப்படம் வெளிவர இருக்கிறது. ஹரி படத்தினை பற்றி முழுத்தகவலும் இன்னும் ஒரிரு வாரங்களில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியாகும்” என்று பேசினார். சூர்யா மட்டும் தனியாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்து இருந்தார்.




