மருமகனுடன் மாமியார் கள்ளக்காதல் – கணவரை மருமகனுடன் சேர்ந்து கொன்ற மனைவி..!!



நாளுக்கு நாள் தகாத உறவுகளின் அளவும், அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. பெரும் சமூக சீரழிவை நோக்கி மக்களில் சிலர் வேகமாகப் போய் வருவதை நிரூபிக்கும் விதமாக இத்தகைய தகாத உறவுகள் குறித்த செய்திகள் அதிக அளவில் வருகின்றன.
இந் நிலையில் மருமகனுடன் கள்ளக் காதல் கொண்டிருந்த மாமியார் அதைக் கண்டித்த தனது கணவரை மருமகனுடன் சேர்ந்து கொலை செய்த கொடும் செயல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடந்துள்ளது.

அகரங்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் வயது 43. இவரது மனைவி ஜோதி. இவருக்கு 40 வயதாகிறது. இந்தத் தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

முதல் மகள் தேவிக்கும், வேதாராண்யத்தைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் நாகராஜனுக்கும் காதல் கல்யாணம் செய்து வைத்தனர்.

தேவி தனது கணவருடன் தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார். இந் நிலையில் தேவியின் கணவருக்கும், ஜோதிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு விட்டது.

பன்னீர்செல்வம் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அவர் சமீபத்தி்ல ஊர் திரும்பிய போது ஜோதியின் தகாத செயல் தெரிய வந்து அதிர்ந்தார். இதையடுத்து தனது மனைவியை கடுமையாக கண்டித்தார்.

ஆனாலும் ஜோதி தனது போக்கை கைவிடுவதாக இல்லை. நாகராஜனுடன் தொடர்ந்து உறவைப் பராமரித்து வந்துள்ளார். ஆனால் கணவர் தொடர்ந்து எச்சரித்து வந்ததால் அவரைக் கொலை செய்து விட தீர்மானித்தார்.

இதையடுத்து தனது மருமகனுடன் சேர்ந்து நேற்று பன்னீர்செல்வத்தை தாக்கி தலையை சுவரில் மோத வைத்து கொடூரமாக கொலை செய்தார் ஜோதி. பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தில் கூறி கூச்சல் போட்டு நாடகமாடினார்.

ஆனால் அக்கம் பக்கத்து மக்களுக்கு ஜோதி குறித்து ஏற்கனவே அரசல் புரசலாக தெரியும் என்பதால் போலீஸாருக்குத் தகவல் கொடுத்து விட்டனர்.

போலீஸார் விரைந்து வந்து ஜோதியைப் பிடித்து விசாரித்தபோது அவர் உண்மையை கக்கி விட்டார். இதையடுத்து ஜோதியையும், அவரது மருமகன் நாகராஜனையும் போலீஸார் கைது செய்தனர்.

கொலையும் செய்வாள் பத்தினி என்பது பழமொழி. ஜோதி போன்றவர்கள் அதை மாற்றிப் புதுமொழி படைப்பது கொடுமையிலும் பெரும் கொடுமையாகும்
.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item