யாழ். இளைஞர் யுவதிகளை ஏமாற்றி பணம்பறிந்த கும்பல் பொலிஸ் வலையில் சிக்கல்!!



யாழ்.மாவட்டத்தில் வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகளிடம் பல லட்சம் பணம் மோசடி செய்யததாகக் கூறி நிறுவனம் ஒன்று இன்று பிற்பகல் முற்றுகையிடப்பட்டு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இல 111 டேவிட் வீதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச பாடசாலை ஆரம்பிப்பதாகவும் அதற்குரிய ஆளணியைத் திரட்டும் நோக்கில் வேலை தருவதாகவும் கூறி பல இளைஞர், யுவதிகளிடம் ஆயிரக் கணக்கில் பணம் பெறப்பட்டுள்ளது.

குறித்த இந் நிறுவனம், நேர்முகத் தேர்விற்கு சமூகமளித்தவர்களிடம், பயிற்சிக் கட்டணம் என்ற பெயரில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ருபா வரையில் பெற்றுக் கொண்டுள்ளது.

வழமைபோன்று இன்று காலை நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டவர்களிடம் மேற்படி பணம் பெற்றுள்ளனர். நேர்முகத் தேர்வு நடத்தியவர்களின் மேல் சந்தேகம் கொண்ட சில இளைஞர்கள் அவர்களை விசாரித்துள்ளனர். அதன்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து நிறுவனம் முற்றுகையிடப்பட்டு யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நிறுவனத்தில் பணிபுரிந்த மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படுபவர் கொழும்பில் உள்ளாரெனவும் அவரைத் தமக்குத் தெரியாதெனவும் அனைத்துத் தகவல்களும் தொலைபேசி ஊடாகவே பரிமாறிமேற்கொண்டதாகவும் அங்கு பணிபுரிந்தவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item