மீண்டும் ஒரு யாழ். பல்கலை மாணவன் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்!!



யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இனந் தெரியாத நபர்களினால் நேற்று தாக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று மாலை தெரிவித்துள்ளது .
யாழ். பல்கலைக்கழக கலைத்துறை நான்காம் வருட மாணவரான ராஜவரோதயன் கவிதாஸ் (வயது 26) நேற்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தவபாலன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தைச் செர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் ராஜவரோதயன் கவிதாஸ், கிளிநொச்சி - பரந்தன் பூநகரி வீதியை அண்மித்த பகுதியில் வைத்து இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த குழுவினரினால் பொல்லுகளினாலும் இரும்புக் கம்பிகளினாலும் அவர் வீட்டில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாகவும் தவபாலன் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தவபாலன் மேலும் தெரிவித்துள்ளார்
.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item