YAHOOவை வாங்குவதற்கு Google திட்டம்
https://besttamillnews.blogspot.com/2011/10/yahoo-google.html
புகழ்பெற்ற இணையத்தள தேடுபொறி நிறுவனமான Google, YAHOO நிறுவனத்தை வாங்க திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க பத்திரிகையான வோல்ஸ்டிரீட் ஜேர்னலில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. YAHOO நிறுவனத்தை வாங்க அதிக முதலீடு தேவை என்பதால் அதற்கான நிதியைதிரட்ட சில பங்கு முதலீட்டு நிறுவனங்களுடன் Google பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் எந்ததெந்த நிறுவனங்களோடு Google பேச்சு நடத்தியது என்பது தெரியவில்லை.
முன்னதாக YAHOOவைக் கையகப்படுத்த மென்பொருள் நிறுவனமான Microsoft முயற்சி செய்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. YAHOO வாங்க முயற்சிப்பதன் மூலம் YAHOOவின் பங்கு விலைகளை சந்தையில் உயரச்செய்து அதை கையகப்படுத்தத் துடிக்கும் Microsoft போன்ற போட்டி நிறுவனங்களின் முயற்சியை முறியடிப்பது என்ற நோக்கத்தையும் Google கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

