811 முக்கிய புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்…
https://besttamillnews.blogspot.com/2011/10/811_23.html
811 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உலங்குவானூதிர்கள், கடற்படை படகுகள் மற்றும் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய ஆறு முக்கிய விடுதலைப் புலித் தலைவர்கள் உள்ளிட்ட 811 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
கிளிநொச்சி, வெள்ள முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு போன்ற புலிகளின் முக்கிய முகாம்களில் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர்களாக கடமையாற்றிய ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த புலி உறுப்பினர்கள் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் எனத் தெரிவித்து அவர்களை விடுதலை செய்வதற்கு சில சக்திகள் முனைப்பு காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குண்டு மற்றும் கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களும் இந்தக் குழுவில் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
