கிளிநொச்சியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறி வீட்டில் புகுந்து கொள்ளை.




தம்மை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறிக் கொண்ட அறுவர் வீட்டில் புகுந்து தங்க சங்கிலியினையும் தொலைபேசிகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கிளிநொச்சி – பல்லவராயன்காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது..இச்சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இவர்கள் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் எனத் அறிமுகப்படுத்திக் கொண்டு உங்கள் வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர் எனவே, உங்களை விசாரிக்க வேண்டும் எனக் கூறி மிரட்டி விட்டு அந்த வீட்டு எஜமானிஅணிந்திருந்த இரண்டு பவுண் சங்கிலி மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகள் என்பனவற்றை பறித்துச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக முழங்காவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item