ஒரே தினத்தில் பிறந்தநாளைக் கொண்டாடும் அபூர்வ சகோதரர்கள்.... நம்பமுடியாத ஆச்சரியம்!..

http://besttamillnews.blogspot.com/2014/01/blog-post_5536.html
ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களில் தமது பிள்ளைகள் அனைவரது பிறந்தநாளையும் சரியாக ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு பெரும்பாலான பெற்றோர் திணறுவது வழமை.
ஆனால், பிரித்தானியாவில் கும்பிறியாவில் கிளியேட்டர் மூர் எனும் இடத்தைச் சேர்ந்த 4பிள்ளைகளின் பெற்றோரான எமிலி சக்றுஹாம் (22வயது) மற்றும் பீற்றர் டன் (24வயது) தம்பதிக்கோ அத்தகைய பிரச்சினைகளுக்கே இடமில்லை.
ஏனெனில், அவர்களது 4 பிள்ளைகளும் ஒரே மாதம், ஒரே திகதியில் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
அவர்களது நான்காவது மகனான ரேயன் கடந்த 12ஆம் திகதி பிரசவமாகியுள்ளார்.
எமிலி - பீற்றர் தம்பதியின் மூத்த மகனான சாம், (5வயது) மற்றும் இரண்டாவதாக பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளான புரூக், (2வயது) மற்றும் நிகோலி ஆகியோர் ஜனவரி மாதம் 12ஆம் திகதியே தமது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
இவ்வாறு ஒரு தாய்க்கு பிறந்த 4 பிள்ளைகளும் ஒரே நாளில் பிறந்த நாளைக்கொண்டாடுவது 133225 பிறப்புகளுக்கு ஒரு பிறப்பு என்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.
இது தொடர்பில் எமிலி விபரிக்கையில், எமது மகன் ரேயன் கடந்த 12ஆம் திகதி பிறந்தபோது என்னால் என்னையே நம்ப முடியவில்லை. ஏனெனில், நாம் எமது பிள்ளைகள் ஒரே தினத்தில் பிறக்க வேண்டும் என்று முன்கூட்டியே எதுவித திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்று கூறினார்.
அந்தக் குழந்தைகள் நால்வரும் மருத்துவர்களால் நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் பிறக்கவில்லை என அவர் கூறினார்.
சாம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த பிரசவ தினத்துக்கு இரு வாரங்கள் தாமதமாக பிறந்த அதேசமயம் புரூக்கும் நிகோலியும் பிரசவ தினத்துக்கு ஒரு மாதம் முன்கூட்டியே பிறந்துள்ளனர்.
புரூக்கினதும் நிகோலியினதும் இருதய துடிப்பு மந்தமானதையடுத்தே அவர்கள் அறுவைச்சிகிச்சை மூலம் உரிய பிரசவ தினத்திற்கு முன்பாக பிரசவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நான்காவது பிள்ளையான ரேயன் 3 நாட்கள் தாமதமாக பிரசவமாகியுள்ளன.
1,33,225 பிறப்புகளுக்கு ஒரு பிறப்பு என்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.