பேஸ்புக்கில் புதிய வைரஸ்!

பேஸ்புக்கில் தானாகவே like போட்டு, comment எழுதும் வைரஸ் ஒன்றினை, Anti Virus Programme எழுதும் நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது.

இது பிரேசில் நாட்டு facebookஅக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு ‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. Chrome பிரவுசர் மற்றும் Firefox add-on புரோகிராம் என்ற போர்வையில் இது கம்ப்யூட்டரின் உள்ளே நுழைகிறது. இது பாதித்த கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், facebook கில் லாக் இன் செய்துள்ளாரா எனக் கவனிக்கிறது. லாக் இன் செய்திடும் பட்சத்தில், தான் அனுப்பப்பட்டுள்ள தளத்திலிருந்து, கம்ப்யூட்டரை செட் அப் செய்திடும் பைல் ஒன்றை இறக்கிக் கொள்கிறது.

இதில் பல கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மற்றொரு பக்கத்திற்கான லிங்க் அமைத்தல், பதியப்பட்ட கருத்துக்களை ஷேர் செய்தல், நண்பர்கள் பக்கத்தில் கருத்துக்களை எழுதுதல், ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றிற்கு கமெண்ட் அமைத்தல், நண்பர்களை குழுவில் சேருமாறு அழைப்பு அனுப்புதல் எனப் பல்வேறு செயல்பாடுகளுக்கான கட்டளைகள் இதில் உள்ளன

Related

Uncategorized 152341608928590636

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item