சிம்புவுககாக காத்திருக்கிறார் நயன்தாரா!

சிம்பு-நயன்தாரா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப்போகிறார்கள் என்றதும், அவர்களைப்பற்றிய பரபரப்பு செய்திகள் மீண்டும் கோலிவுட்டில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆக, நயன்தாரா என்ற நடிகை அப்படத்தில் இணைக்கப்பட்டதால் இனி படத்திற்கான விளம்பரத்திற்கு பணத்தை வாரி இறைக்கவேண்டிய அவசியமில்லை. எந்த செலவும் இல்லாமல் பப்ளிசிட்டி செய்து கொண்டேயிருப்பார்கள் மீடியாவினர் என்ற முடிவுக்கு வந்து விடடார் டைரக்டர் பாண்டிராஜ்.

ஆக, தனது முந்தைய படங்களான பசங்க, மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களைப் போன்று இந்த படத்தையும் ஹிட் பட லிஸ்டில் சேர்த்து விடுவதற்கான வேலைகளில் தற்போது தீவிரமடைந்திருக்கும் அவர், முதல் கட்ட படப்பிடிப்பில் கதாநாயகி முடிவாகாததால், சிம்பு, சூரி மற்றும் அப்படத்தில் நடிக்கும் மறற் நடிகர்-நடிகைகளை வைத்துதான் படப்பிடிப்பு நடத்தியிருந்தார்.

ஆனால், இப்போது நயன்தாரா உறுதி செய்யப்பட்டிருப்பதால், டிசம்பர் 5-ந்தேதி அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்குகிறாராம். இதற்காக, எப்போதோ கால்சீட் ஒதுக்கிக் கொடுத்து விட்ட நயன்தாரா, சிம்புவுடன் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேருவதற்காக உற்சாகமாக தயாராகி விட்டார். ஆனால், சிம்பு, கெளதம்மேனனின் படத்தில் கலந்து கொண்டு வருவதால், அவரது வருகைக்காக காத்திருக்கிறாராம்.

மேலும், நயன்தாரா நடித்து வந்த அனாமிகா, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்கள் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டிவிட்டதால், சிம்பு படத்துக்கு கேட்ட நேரத்தில் கால்சீட் கொடுத்து முழு ஒததுழைப்பு கொடுத்து நடிப்பார் என்று தெரிகிறது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item