பேஸ்புக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை


சமூக வலைத்தளங்களில் பிரபலமாக விளங்கும் பேஸ்புக் தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக 'Sympathize' பட்டனை அறிமுகம் செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருகிறது. பேஸ்புக்கில் 'Like' பட்டன் வலைத்தள பயனாளர்களிடையே பேசப்படும் பொருளாகவும் பிரபலமான தகவல் அல்லது படங்கள், காணொளிகள் தொடர்பிலான அங்கீகாரத்துக்கு வழிவகுப்பதாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் கவலை,அனுதாபங்களை பேஸ்புக் பாவனையாளர்கள் தெரிவிக்கும் நோக்கில் விரைவில்  'Sympathize' பட்டன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 'Ohoto Comment' என்ற விடயம் இணைய பாவனையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேவேளை, கணனி தொழில்நுட்பம், கையடக்கத் தொலைபேசி இயங்குதளம், இணைய பாவனை மற்றும் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் உலகிலுள்ள நுண்ணறிவாளர்களில் பிரபலமான ஒருவரை பேஸ்புக் நிறுவனம் உயர் பதவியில் அமர்த்தியுள்ளதாக நேற்று அறிவித்
துள்ளது. யான் லீகுன் என்ற பெயர் கொண்ட உலகில் கணனி வல்லுநர்களிடையே நன்றாக அறியப்பட்ட ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் பேஸ்புக்கில் தொழில்நுட்ப ரீதியான மாற்றம் விரைவில் ஏற்பட வாய்ப்புண்டு என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related

வினோதங்கள் 180839092427759785

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item