போப்பிடம் நேரில் ஆசி பெற ரோம் சென்ற அமலாபால்!
http://besttamillnews.blogspot.com/2013/12/blog-post_1122.html
போப்பிடம் நேரில் ஆசி பெற ரோம் சென்றார் அமலாபால். மைனா, தலைவா, தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் நடித்த அமலாபால் தற்போது மலையாளத்தில் ஒரு இந்தியன் பிரணயகதா என்ற படத்தில் பஹத் பாசில் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் சிறப்பு காட்சியை இயக்குனர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சென்னையில் திரையிட்டார். அவர்கள் அமலாவின் நடிப்பை பாராட்டினார்கள். இதையடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஷூட்டிங் பிஸியிலிருந்து ஓய்வு எடுத்திருக்கிறார் அமலாபால்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்க அவர் ரோம் நகருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு போப்பின் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க அமலாபால் விசேஷ அனுமதி பெற்றுள்ளார். அப்போது போப்பிடம் ஆசி பெறுகிறார். ஜனவரி மாதம் சென்னை திரும்பும் அமலா தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.


