முப்பை பெண்களை வீட்டில் அடைத்து வைத்து சென்னையில் விபச்சாரம்! பெண்கள் மீட்பு!! புரோக்கர் கைது!!!

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_9534.html

பாலியல் தொழிலுக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த மும்பையை சேர்ந்த 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையிலான தனிப்படையினர், மூலக்கடை அருகே மப்டியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீஸ் என தெரியாமல் ஒரு ஆசாமி பேசினார். அவர், “மும்பை அழகியுடன் உல்லாசமாக இருக்க ரூபா 5 ஆயிரம் தந்தால் போதும்” என்றார்.
பின்னர், அந்த ஆசாமி மப்டியில் இருந்த போலீசாரை ஆட்டோவில் ஏற்றி கொடுங்கையூரில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாலியல் தொழில் நடப்பது தெரிந்தது.
இதையடுத்து, அந்த ஆசாமியை போலீ சார் கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் கமல் (24) என்பது தெரியவந்தது.
வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மும்பையை சேர்ந்த 2 இளம் பெண்களை போலீசார் மீட்டனர். பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த பப்பி என்ற பத்மபிரியா தப்பியோடி விட்டார்.
அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.