கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடி பறக்க விடப்பட்டதால் பரபரப்பு!!

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_8798.html

சிட்னி மைதானத்தில் இன்று மாலை அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது பார்வையாளர் ஒருவர் புலிக்கொடியை ஏந்தி உயர்த்தியபடி இருந்தார்.
ஆதரவாளர்கள் மத்தியில் புலிக்கொடி பறப்பதை அவதானித்த அவுஸ்திரேலிய காவல்துறையினர் உடனடியாகச் சென்று அந்தக் கொடியைப் பறித்தெடுத்தனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புலிக்கொடியுடன் ஒருவர் மைதானத்தில் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலிக் கொடி மைதானத்திற்குள் கொண்டு வரப்பட்டமை தொடர்பாக குறித்த நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

