சைக்கிளோட்டியை கொடூரமாக மோத பஸ்ஸை ஆயுதமாகப் பயன்படுத்திய சாரதி! (அதிர்ச்சிக் காணொளி இணைப்பு)


இது உண்மையிலேயே ஒரு கொடூரமான நிகழ்வு தான்... பஸ் சாரதி தனது வாகனத்தை சைக்கிளோட்டி ஒருவரை மோதுவதற்கு ஆயுதமாகப் பாவித்துள்ளார்.
29 வயதான Gavin Hill என்ற சாரதியே மேற்படி மிருகத்தனமாக நடந்து கொண்டவராவார்.
பிரித்தானியாவின் பிரிஸ்டல் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான Philip Mead என்ற சைக்கிளோட்டியே பஸ்ஸால் அடித்து விழுத்தப்பட்டவர் ஆவார்.
இவரது கால், மணிக்கட்டு மற்றும் கட்டைவிரல் ஆகியன முறிவடைந்துள்ளத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக் காட்சிகள் வீதியோரக் கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளதால் பஸ் சாரதி மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் எளிதாகியுள்ளன.
கிரவுன் நகர நீதிமன்ற நீதிபதியான Mark Horton நீதிமன்றில் குறித்த வழக்கு தொடர்பாக Gavin Hill ஐ நோக்கி கருத்துத் தெரிவிக்கையில்,
இது ஒரு விபத்து இல்லை. நீ பஸ்ஸை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளாய்.
ஆபத்தை விளைவித்து வாகனம் ஓட்டியமையால் பஸ் சாரதி 17 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இரண்டரை வருடங்களுக்கு அவர் வாகனம் ஓட்ட முடியாது. சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.


Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item