மூங்கிலில் செல்போன் தயாரித்து உலக சாதனை படைத்த பிரிட்டிஷ் மாணவன்!
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_5157.html

பிரித்தானியாவின் Middlesex பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மூங்கிலில் செல்போனைத் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார்.
23 வயதான குறித்த மாணவர் உலகின் முதலாவது மூங்கில் செல்போன் தயாரித்த பெருமையைப் பெற்றுள்ளார்.
Kieron-Scott Woodhouse என்ற பெயருடைய குறித்த மாணவர் கருத்துத் தெரிவிக்கையில்,
செல்போனை நூதனமாகத் தயாரிக்க விரும்பியதால் தான் இவ்வாறு செய்தேன்.
இது சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது.
இதில் வழமையான செல்போன்களுக்கு இருக்கும் அனைத்து வசதிகளும் உள்ளன.
இந்த வருட இறுதியில் சந்தைக்கு விடுவதற்கு முடிவு செய்துள்ளோம்.

