பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை! (காணொளி, பட இணைப்பு )

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_3281.html

உலகின் மிக அதிகமான எடையுள்ள குழந்தை ஒன்று சீனாவில் பிறந்துள்ளது. இது வழமையாகப் பிறக்கும் குழந்தையின் எடையில் இருந்து இரண்டு மடங்கிலும் அதிகமாகும். ஏற்கனவே உள்ள கின்னஸ் சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் Henan மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பிறந்த Chun Chun என்ற இக்குழந்தையின் எடை 7 கிலோ ஆகும்.
சீனப் புத்தாண்டின் பின்னர் மகன் பிறந்துள்ளதால் மகிழ்ச்சியடைவதாக 29 வயதான தாயார் கருத்துத் தெரிவித்துள்ளார்.
குறித்த குழந்தையின் பெருமைக்குரிய அப்பாவான Han Jingang கருத்துத் தெரிவிக்கையில்,
ஏனைய கர்ப்பிணிப் பெண்களிடம் இருந்து எனது மனைவி வித்தியாசமாக இருந்ததை நாங்கள் பார்க்கவில்லை.
சாப்பிடுவது தண்ணீர் குடிப்பது எல்லாம் மிகச் சாதாரணமாகத் தான் இருந்தது.
இன்றைய தினம் சீனக் கலண்டரின் படி முதலாவது வசந்த நாள். நான் மிகச் சந்தோசமாக இருக்கிறேன்.
Read More news
