கர்ப்பமாக இருந்த அண்ணியை கற்பழித்து கொன்றவருக்கு, ஆயுள்தண்டனை!!
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_4654.html

கர்ப்பமாக இருந்த அண்ணியை கற்பழித்து கொன்றவருக்கு, மகளிர் கோர்ட்டில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சென்னை கொடுங்கையூர், டீச்சர்ஸ் காலனி, 3வது தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார். தனியார் நிறுவன ஊழியர்.
இவரின் மனைவி ஜெயஸ்ரீ,27. ஏழு மாத கர்ப்பிணியான இவர், வீட்டில் தனியாக இருந்த போது, ராம்குமாரின் தம்பி கண்ணன்,27, உறவுக்கு அழைத்தார்.
மறுத்தவரை பலாத்காரம் செய்து கொன்றார். கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, கண்ணனை கைது செய்தனர். வழக்கு விசாரணை, மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. மகளிர் கோர்ட் நீதிபதி சேது மாதவன், ஆயுள்தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

