ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு?


ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு பர்ன் நோட் என்ற இணையத்தளம் உதவி புரிகிறது. நீங்கள் யாருக்கு செய்தி அனுப்பி வைக்கிறீர்களோ அவர் மட்டுமே அந்த செய்தியை படிக்க கூடிய அளவுக்கு பாதுகாப்பாக செய்திகளை அனுப்புகிறது.
முகப்பு பக்கத்தில் உள்ள பகுதியில் செய்தியை டைப் செய்தவுடன் அதற்குறிய இணைப்பு முகவரி ஒன்றை தருகிறது. இந்த முகவரியை யாருக்கு அனுப்பி வைக்கிறோமோ அவர்கள் மட்டும் தான் அதனை படிக்க முடியும். அவர்களும் கூட குறிப்பிட்ட நேரம் வரை தான் படிக்க முடியும். அதன் பிறகு அந்த செய்தி இணைய வெளியில் மறைந்து விடும்.
செய்தியை எத்தனை நொடிகள் பார்க்கலாம் என்ப‌தையும் அதற்கு கடவுச்சொல் தேவையா என்பதை கூட அனுப்புகின்றவரோ தெரிவு செய்து கொள்ளலாம். கடவுச்சொல் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு மட்டும் தான். ஆனால் செய்தி அனுப்ப உறுப்பினராக வேண்டும் என்ற நிபந்தனையில்லை.
எந்த செய்தியும் ஒரே ஒரு முறை மட்டுமே படிக்க முடியும். உறுப்பினராக இருந்தால் செய்தி படிக்கப்பட்டு விட்டதா என்னும் பதிலை தெரிந்து கொள்ளும் வசதியும் உண்டு.
ரகசிய செய்திகளை யாரும் ந‌கலெடுக்கவோ அல்லது அந்த இணைய பக்கத்தையோ மொத்தமாக ஸ்கிரின்ஷாட் போல சேமிப்பதோ சாத்தியமில்லை என்றும் இந்த தளம் உறுதி அளிக்கிறது.
இந்த செய்திக்கான பக்கத்தை பார்த்து கொண்டிருக்கும் போதே வேறு ஒரு தளத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்தாலும் அந்த பக்கம் காலியாக தான் இருக்கும். யாருக்கு அனுப்பபட்டதோ அவரால் செய்தி பார்க்கபடவில்லை என்றாலும் 72 மணி நேரத்தில் செய்தி தானாக மறைந்து விடும்.

இங்கே கிளிக் செய்யவும்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item