புலிகளின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் இணைய போர் ஆரம்பம்-எச்சரிக்கும் உயர்வு

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_3438.html


நடுநிலமையான ஊடகம் என்ற பெயர் எடுப்பதற்கு பலவிதமான செய்திகள் இருக்கையில் ஒட்டுமொத்தமாக இடைவிடாது புலிகளின் கட்டமைப்புக்களை பற்றியும் புலிகளின் தலைவர் மேதகு.வே பிரபாகரன் என்ற மகத்தான பெரும் தலைவர் பற்றியும் கொச்சைப்படுத்தும் விதமாக பலவிதமான ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு ஒட்டுமொத்தமாகவே புலிகள் அமைப்பின் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த இவ்வாறான இணையங்கள் இலங்கை அரசின் விருப்பத்தை நிரைவேற்றுகின்றனவா என்ற இயல்பான சந்தேகமே எமக்கு எழுந்துள்ளது.
மகிந்த ராஜபக்ஷவை தமது ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்றோ அல்லது இலங்கை ராணுவத்தினரை ராணுவத்தினர் என்றோ அல்லது இலங்கை அமைச்சர்களை தமது அமைச்சர்களாக ஏற்றுக்கொண்டு செய்தி வெளியிடுவதை தமிழ் இணையங்கள் நடத்துபவர்கள் சற்று சிந்தித்து செயற்பட வேண்டும்.நடுநிலமை என்று கூறிக்கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்று செய்தி வெளியிடும் போது எங்கு போனது உங்கள் நடுநிலமை?இதிலும் கொடுமையான விடயம் என்னவென்றால் தேசிய ஊடகங்கள் என்று மார்தட்டிக்கொள்ளும் ஊடகங்களும் தமிழ் இன அழிப்பை நடத்தி பல ஆயிரம் எமது அருமை உறவுகளை பலியெடுத்த மகிந்தவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்று தமது செய்திகளில் குறிப்பிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.ஒரு பொறுப்புள்ள சமூக அக்கறையுள்ள மொழி,இன பற்றுள்ள எந்த இணையமும் இவ்வாறான சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி செய்தியை வெளியிடாது.
தமிழ் ஊடகங்கள் என்ற பெயரில் தமிழர்களிடம் விளம்பரங்களை பெற்று தமிழ் தேசிய அடித்தளத்தையே இல்லாது அகற்றுவதற்கே சில இணையங்கள் முயல்கின்றனவா?ஏன் இவர்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் அதன் கட்டமைப்புக்களையும் குறி வைத்து கலங்கப்படுத்துவது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள்?ஏன் உங்களால் மகிந்தவினதோ அல்லது இலங்கை அரசாங்கத்தில் உள்ள முக்கிய உறுப்பினர்களின் அந்தரங்க,இரகசிய,அவர்களால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பான செய்திகளை முதன்மைப்படுத்தி வெளியிட முன்வருவதைல்லை?
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சேறு பூசும் போரை கிட்டத்தட்ட 5 இணையங்கள் முழு மூச்சுடன் ஈடுபட்டுவருகின்றனர்.இவர்கள் தொடர்ந்தும் புலிகளையும்,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகத்தான பெரும் தலைவர் அவர்களையும் கலங்கப்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிடுவார்களேயானால் அந்த இணையங்களின் முகமூடியை உயர்வு கிழிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.