செயற்கை மூட்டு அறுவை சிகிச்சையால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்!!!


செயற்கை இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்தால் புற்றுநோய் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செயற்கை இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் பலர் உரிய தீர்வு கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். செயற்கை இடுப்பு மூட்டு அறுவைசிகிச்சை செய்தவர்களிடம் நடத்திய ஆய்வில் பலர் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவை தவிர 72 பேரின் மரபணுக்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுவாக செயற்கை இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சைக்கு உலோக தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. நாள் கடந்ததும் இவைகளில் இருந்து ரசாயன கழிவு வெளியேறி விஷமாகி ரத்தத்தில் கலக்கிறது. இதன்மூலம் செல்கள் பாதிக்கப்பட்டு பின்னர் அவை புற்றுநோயாக மாறுகின்றன. இந்த தகவலை இங்கிலாந்து விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item