நீச்சல் உடையில் யாழ் மாணவிகழ்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை நேற்றைய தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ திறந்து வைத்தார். இந் நிகழ்வு பெரும் எடுப்பில் கோலாகலமாக நடாத்தப்பட்டது.
இந் நிலையில் குறித்த நீச்சல் தடாகத்தில் சாகாச நிகழ்வுகளை நடாத்துவதற்கு நீச்சலுடையில் யாழ் பிரபல பாடசாலை மாணவிகளை ஈடுபடுத்த முயற்சித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சி தோல்வியடைந்ததாக தெரியவருகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மத்திய கல்லூரி மாணவர்களுக்கு நீச்சல் தடாகத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், மகிந்த அவர்களின் வருகை நாளன்று, நீச்சல் தடாகத்தில் சாகாச நிகழ்வுகளை நடாத்தம்படி யாழ் பிரபல பெண்கள் பாடசாலை அதிபரிடம் யாழ்ப்பாண அமைச்சர் தொடர்பு கொண்டிருக்கிறார்.

ஆனாலும் மாணவிகள் நீச்சல் உடையில் சாகச நிகழ்வு நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை அந்தப் பாடசாலை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் யாழ்ப்பாண அமைச்சர் கொழும்பு உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு சாகாச நிகழ்விற்காக பெண்களை ஒழுங்கு செய்தள்ளார்.

குறித்த கொழும்பு பெண்கள் பாடசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட மாணவிகள் நீச்சலுடையில் தமது சாகாசத்தைக் காட்டி மகிந்த, யாழ்ப்பாண அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிபர் மற்றும் அங்கு வந்திருந்த மாணவர்களின் கண்ணிற்கு குளிர்ச்சியைக் கொடுத்ததாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறிக்த பிரபல பாடசாலை மாணவிகள் நாமல் ராஜபக்ஸவிற்கு கைகொடுப்பதற்கு முண்டியடித்து கைகொடுத்து தமது சந்தோசத்தை வெளிப்படுத்தியதாக தெரியவருகிறது

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item