தமிழினப்படுகொலைக்கு எதிராக நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் சபையை நோக்கித் தொடரும் நடைப்பயணம்

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_06.html

நீதிக்கான நடைபயணத்தின் கோரிக்கைகள்:
1.பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
1.பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2.தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு, இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3.தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
4.சிறீலங்கா தடுத்துவைத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, விடுதலை செய்யப்படவேண்டும்.5. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
தமிழனப்படுகொலைக்கு எதிராக நீதிகேட்டு நடைபயணத்தை 05.02.2012 ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து மூன்று ஈழத்தமிழர்கள் ஆரம்பிக்கின்றனர்.ஒரு மாதகாலம் கடும் குளிருக்கு மத்தியில் ஒரு இனத்தின் வலிகளை தமது கால்களில் சுமந்து நீதிகேட்டுச் செல்லும் இவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி ஜெனிவாவில் மனிதவுரிமைகள் சதுக்கம் முருகதாசன் திடலைச் சென்றடையவுள்ளனர். இந் நடைபயணத்தை மேற்கொள்ளும் தமிழர்களில் பிரான்சில் இருந்து செல்லும் இரு சகோதரர்களான திரு. செல்வின், திரு. கஐன் ஆகியோர் பிரான்சு லாக்கூர்னோவ் மாநகரசபை உதவி முதல்வரால் புதன்கிழமை மாலை மதிப்பளிக்கப்பட்டு வாழ்த்தும் கூறப்பட்டது. மானகர சபை உதவி முதல்வர் தனது கருத்தைக் கூறுகையில் „தமிழினம் தனது உரிமைக்காக எவ்வாறு போராடியது என்றும் அந்த இனம் சிங்கள ஆட்சியாளர்களால் எவ்வாறு படுகொலைக்கு உள்ளாகியது என்பதைத் தான் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அறிந்து கொண்டதாகவும், தமிழ்மக்களை உயிர் இழப்பில் இருந்து காப்பாற்ற உதவி செய்ய முடியாமற் போனது பெரும் கவலை என்றார்“. தொடர்ந்து, தமிழ்மக்களுக்கு நீதியான நியாயமான ஓர் தீர்வு கிடைக்க வேண்டிணது அவசியம் என்றும் உரிமையும், நீதியும் கிடைக்கும் வரை ஓயாமல் ஒட்டுமொத்தத் தமிழினமும் சனநாயக அரசியல் போரட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார். நடைபயணத்தைத் மேற்கொள்கின்றவர்களை வாழ்த்தியதோடு கடுங்குளிருக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய குளிர் அங்கியையும், பாதணிகளையும் அன்பளித்திருந்தார்.தமிழீழ அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மாவீரர் ஆசி பெற்று நடைப்பயண சகோதரர்கள் விடைபெற்றனர். இவர்களுடன் சுவிஸ் நாட்டில் இருந்து கிரேசியன் அவர்களும் இணைந்து கொள்கின்றார். இவர் தனது நடைப் பயணம் தொடர்பாகக் கூறுகையில்.
„இருபத்தி இரண்டு ஆண்டுகளாக சுவிஸில் வாழ்துவருகின்ற நான் இன்றும் ஓர் அகதியாக எனக்கென ஒரு நாடு இல்லாமலே இருக்கின்றேன். இந்த நிலை மாற வேண்டும். மூன்று தசாப்தங்களாக அகிம்சை வழியில் போராடினோம். அதற்கு அடுத்த மூன்று தசாப்பங்களாக ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. அது மௌனிக்கப்பட்ட இன்றைய நிலையில் எமது சுதந்திர தமிழீழ தனியரசை மீட்டெடுப்பதற்கு தமிழ் மக்கள் எத்தகைய போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்களாக இந்த சர்வதேச சமூகமே உள்ளது“என்றார்.
இத்துடன் நடைபயணத்தை மேற்கொள்ளும் மருதையா கஜன் அவர்களின் நீதிக்கான நடைபயணத்தின் விளக்கவுரை இணைக்கப்பட்டுள்ளது.
„மருதையா கஜன் ஆகிய நான் பிரான்சில் வசித்து வருகின்றேன். எங்கள் நாட்டில் தொடர்ந்த இனப்பிரச்சினை காரணமாக கடந்த 2004 ஆம் ஆண்டு பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தேன். எனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு சமாதான உடன்டிபடிக்கையை முறித்துக்கொண்டு சிறீலங்கா அரசாங்கம் மீண்டும் தொடங்கிய கடுமையான போர் என்னை மிகவும் பாதித்தது.2008ம் ஆண்டு போர் உச்சநிலையை அடைந்து தினந்தோறும் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டும், காயப்பட்டும் அவலங்களை எதிர்கொண்டபோது அந்தப் போரை தடுத்து நிறுத்துவதற்காக பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர்களால் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றேன். சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் பெரும் இன அழிப்புடன் போர் நிறைவு பெறும்வரை நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற நான், எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளால் மிகவும் பாதிப்புக்கு உள்ளானேன். சர்வதேச நாடுகள் இந்த விடையத்தில் பெரும் மௌனம் காத்தது எனக்கு பேரதிர்ச்சியைத் தந்தது.போர் முடிந்த பின்னராவது எமது மக்களுக்கு சர்வதேச நாடுகள் நீதியை வழங்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், மூன்று ஆண்டுகள் காத்திருந்தும் எந்த ஒரு நீதியும் எமது மக்களுக்குக் கிடைக்கவில்லை. எமது பூர்வீக நிலத்தில் திட்டமிட்டபடி சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலையை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருப்பது வியப்பைத் தருகின்றது. இன்றும் எமது மக்கள் தடை முகாங்களிலும் சிறைகளிலும் காரணம் ஏதும்மின்றி கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளார்கள். இடம்பெயர்ந்த மக்கள் இன்றும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பமுடியாமல் மரங்களின் கீழும், வீதி ஓரங்களிலும் வாழுகின்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.எதிர்வரும் 27 ஆம் திகதி ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.சிங்கள அரசால் திட்டமிட்டபடி எமது இனத்தின்மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலைக்கு எதிராக நீதிகேட்டு பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து பெல்ஜியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகத்தில் இருந்து சுவிச்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா வரைக்கும் எனது நடைப்பயணத்தை மேற்கொள்ளுகின்றேன்.போராட்டம் இன்னும் ஓய்ந்து விடவில்லை. போராட்ட வடிவம்தான் மாறியுள்ளது. ஆகவே, இந்த நடைப்பயணத்திற்கு மக்கள் அனைவரும் தங்களுடைய தார்மீக ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.“
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.