பெண் ஒருவர் 35 பெயரில் பேஃஸ் புக் கணக்கை வைத்திருக்கிறார் !

சுமார் 35 முதல் 38 பயணாளர் கணக்கை பேஃஸ் புக்கில் திறந்து வைத்திருக்கும் தமிழ் பெண் தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள பெண் தான் இக் கணக்குகளைத் திறந்தாரா, இல்லை இப் பெண்ணின் புகைப்படங்களைப் பாவித்து வேறுயாராவது இக் காரியங்களைச் செய்கிறார்களா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சமீபகாலமாக இலங்கை மற்றும் பிற நாடுகளில் உள்ள பெண்கள் மேற்குலகில் உள்ள தமிழ் இளைஞர்களை பேஃஸ் புக் மூலம் தொடர்புகொள்வதும், பின்னர் சட்டிங் ஊடாகக் காதலிப்பதும் வழமையாகிவிட்டது. பின்னர் பணம் தேவை என்று சொல்லி பணத்தைக் கறந்துவிட்டு ஏமாற்றுவதும் வாடிக்கையாகிவிட்டது.

இந் நிலையில் அங்கீதா, பிரியா, தீபா, பூஜா, ஊர்மிளா எனப் பல பெயர்களில் இவர் பேஃஸ் புக் கணக்கை திறந்துவைத்திருக்கிறார். ரெட்டி, பட்டேல், ஷா, மற்றும் சிங்களப் பெயர்களையும் கூட இவர் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் மற்றும் இலங்கையையும் குறிவைத்து இப் பெண் பெரும் திட்டம் தீட்டியிருப்பாரோ தெரியாது. நீங்கள் பேஃஸ் புக் பாவனையாளராக இருப்பின் இனியாவது உஷாராக இருப்பீர்கள் என நாம் நம்புகிறோம் !





Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item