பிறந்து 15 நிமிடமே ஆன குழந்தைக்கு பேஸ்மேக்கர் பொருத்தி சாதனை

http://besttamillnews.blogspot.com/2012/02/15.html

பொதுவாக பிறந்த குழந்தையின் இதயத்துடிப்பு நிமிடம் ஒன்றிற்கு 120 முதல் 150 வரை இருக்கும். ஆனால் ஜெயாவிற்கு நிமிடத்திற்கு 45 இதயத்துடிப்புகளே பதிவானது.

இதேநிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் சில மணிநேரங்களில் குழந்தை இறந்து விடும் என்பதால் பேஸ்மேக்கர் பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
குழந்தை மரணத்தை தடுக்க இந்த மருத்துவ சோதனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் லுசிலி பேக்யார்டு குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதன் மூலம் ஜெயா மிகக்குறைந்த வயதில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டவர் என்ற பெருமை பெறுகிறார்.

