அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்; கல்லூரி கருத்தரங்கில் பேராசிரியர் தகவல்.

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் தகவல் தொடர்பு மற்றும் கம்ப்யூட்டர் நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கருத்தரங்க நிறைவு விழா நடந்தது. கல்லூரி டீன் கிருஷ்ணசாமி வரவேற்றார். ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். தாளாளர் விஸ்வநாதன், முதல்வர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வெங்கடாஜலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

தகவல் தொடர்பும், கம்ப்யூட்டர் பயன்பாடும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. இதன் அபரீதமான வளர்ச்சியில் பாதிப்புகளும் உள்ளன. செல்போன்கள் மற்றும் செல்போன் கோபுரங்களால் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. செல்போன் அடிக்கடி பயன்படுத்தி நீண்டநேரம் பேசிக்கொண்டு இருப்பவர்களின் நரம்பு மண்டலம் பாதிக்கும். மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஏற்படும்.

செல்போன் கோபுரங்களால் ஆடுமாடுகள், பறவைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே செல்போன் பேசுவதை முடிந்த அளவு குறைக்க வேண்டும். கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலைபார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து குளிர்ந்த நீரில் கைகளை கழுவ வேண்டும். இதில் ஏராளமான மாணவர்கள், ஆராய்ச்சி யாளர்கள் கலந்து கொண்டனர்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item