பொல்கொட ஏரியில் மீனவன் வலையில் சிக்கிய மனித சடலம்!

http://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_17.html
கடலிலிருந்து ஏரிக்கு நுழைந்துவிட்ட சுறா போன்ற பெரிய மீன் தான் தனது வலையில் பிடிபட்டு விட்டதென்று அந்த மீனவன் மகிழ்ச்சி அடைந்தான்.
ஒரே தடவையாக வலையை பலமாக இழுத்து விட்டால் மீன் வலையை கிழித்தெறிந்துவிட்டு ஓடிவிடும் என்று அஞ்சி அந்த மீனவன் தனது படகுக் கருகில் இழுத்தான். அப்போது வலையிலிருந்த பொருளை பார்த்து அந்த மீனவன் அதிர்ச்சியடைந்து மயக்கமடையும் நிலைக்கு தள்ளப்பட்டான்.
அவன் மெதுவாக தன்னை சுதாகரித்து கொண்டு பார்த்த போது தனது வலையில் ஒரு மனித சடலம் இருப்பதை கண்டு கொண்டான். இந்த விசயத்தை அறிந்த மொறட்டுவ பொலிஸார் ஸ்தலத்திற்கு சென்று சடலத்தை மீட்டெடுத்தனர்.