கேரளாவில் பிரம்மாண்ட ஜில்லா
https://besttamillnews.blogspot.com/2013/12/blog-post_23.html
ஜில்லா படத்தின் கேரள வினியோக உரிமையை வாங்கியுள்ள மோகன்லால், படத்தை 300 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.
ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ஜில்லா.
ஜில்லாவின் கேரள வினியோக உரிமையை மோகன்லால் வாங்கிக் கொண்டார்.
இந்நிலையில் மோகன்லால் தான் தாதாவாக நடித்துள்ள ஜில்லா படத்தை கேரளாவில் 300 திரையரங்குகளில் ரிலீஸ் செய்கிறாராம்.
பொங்கல் அன்று ஜில்லா மட்டுமில்லை, அஜித்தின் வீரம் படமும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

