கள்ளக்காதல் உச்சக்கட்டம்: தன்னை வெள்ளைவான் கடத்தியதாக புகார் !


இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட கொழும்பு மாநகரசபை மற்றும் பல நிறுவனங்களின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி வந்த சத்தியசீலன் பாக்கியராஜ் கடந்த 23ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். அச்சுவேலி பிரதேசத்தில் 34 வயதான சத்தியசீலன் பாக்கியராஜ் மறைந்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். அதுமட்டுமல்லாது இவரின் கள்ளக்காதல் தொடர்புகளும் வெளியாகியுள்ளது.
சத்தியசீலன் ஏற்கனவே மணம் முடித்தவர் என்றும் 2 பிள்ளைகளின் தகப்பன் என்றும் அறியப்படுகிறது. இவருக்கும் அச்சுவேலியில் உள்ள ஒரு பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
சத்தியசீலன் அப்பெண் மற்றும் பெண்ணின் தாயார் என மூவருமாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். கொழும்பு மாநகரசபை மற்றும் பல நிறுவனங்களின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றும் இவர், விடுமுறையை கழிப்பதற்காக திருகோணமலைக்குச் சென்றபோது இனந்தெரியாதோர் சிலரால் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக அவரது மனைவிக்கு தகவல் சொல்லப்பட்டதாம். 
இதனை அடுத்து மனைவி திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 13ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து, திருகோணமலை பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் ரவீந்திர வைத்தியலங்கார மற்றும் திருகோணமலை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜயவர்தன ஆகியோரின் பணிப்புரைக்கமைய குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் அநுர பிரேமசந்த விசாரணைகளை மேற்கொண்டனர். 
இதன்போது, காணாமல் போனதாக கூறப்பட்ட சத்தியசீலன் பாக்கியராஜ, அவரின் கையடக்க தொலைபேசியின் உதவியுடனேயே கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளிடம் காணாமல் போனது போன்று நடித்த பின்னர் அச்சுவேலி பிரதேச பெண்ணொருவரை திருமணம் செய்ய அவர் தயாராகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சத்தியசீலன் திருமணம் செய்யவிருந்த பெண்மனியின் தயாரே, இது தொடர்பான வாக்குமூலத்தை அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதாவது கடத்தல் சம்பவத்தை இவரே சத்தியசீலனின் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
எல்லாவற்றையும் பக்காவாகச் செய்துமுடித்த சத்தியசீலன் அன் கோவினர் அவரின் மோபைல் போனை அணைத்து வைக்க மறந்துவிட்டனர். ஜி.எஸ்.எம் போன் என்பதால் அது எந்த டவரில் இருந்து சிக்னலை பெறுகிறது என்பதனை ஆராய்ந்த பொலிசார் இவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். 

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item