நாம் படை எடுப்போம்
https://besttamillnews.blogspot.com/2012/01/blog-post_688.html
தமிழீழத்தில் போர் நடந்த போது ஈழத் தமிழ்வீரர்கள் அந்நிய சிங்கள படைகளுக்கு எதிராக போர் முகம் காட்டி நின்ற போது நாமும் தமிழகத்திலும், புலன்பெயர் நாடுகள் எங்கும் போர் முகம் காட்டி நின்ற போது எமது போர்வீரர்கள் இரவு பகலாக தமிழீழ எல்லைகளை பாதுகாக்க களத்தில் நின்றது போல் நாமும் எம்மண்ணை பாதுகாக்கவும், இனப்படுகொலை ஒன்று நடப்பதை தடுக்கவும் போர்முகம் கொண்டு நின்றோம்.
1948யில் ஆரம்பித்த இன அழிப்பை தொடருவேன் என்று சிறி லங்கா கங்கணம் கட்டி கொண்டு நிற்க, சிறி லங்கா என்ற அரசின் இறையாமையை பாதுகாப்போம் என்று சீனா, பாகிஸ்தான், அமெரிக்க, ருச்சிய, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆயுத வியாபர நாடுகள் கங்கணம் கட்டி கொண்டு நிற்க இவர்களை எதிர்த்து எமது போர்வீரர்கள் நின்றார்கள் அவர்களுடன் சேர்ந்து நாமும் எமது மண்ணையும் மக்களையும் பாதுகாக்க போர்முகம் கொண்டு நின்றோம்.
தமிழீழ மண்ணில் ஒரு இனப்படுகொலையை நடத்திவிட்டு, அதை தடுக்க முடியாமல் எமது போர்வீரர்கள் தமது ஆயுதங்களை மவுனித்த போது புலன்பெயர் நாடுகளில் நாமும் மவுனித்து விட்டோம்.
தமிழீழத்தில் எமது மக்கள் அடக்கு முறைக்குள் பேசமுடியா, போராட முடியா நிலையில் இருந்த போது நாமும் நடப்பதை பார்த்து எம்மால் செய்யகூடிய செயல்பாடுகளை செய்து கொண்டு இருந்தோம்.
சிறி லங்கா அரசும் புலன் பெயர் மக்களை கண்டு பயப்படுகிறது, தான் எடுத்த இன அழிப்பை முழுமை படுத்த முடியாமல் தனது வழிமுறைகளை மாற்றி தமிழீழத்தை சிங்கள மயப்படுத்திக்கொண்டு இருக்கிறது,
உலகத்தை ஏமாற்ற தமிழ் அரசியல்வாதிகள் உடன் பேசுவாதாக காலம் கடத்தி கொண்டு தனது இன அழிப்பையும், சிங்களமய படுத்தளையும் தொடர்ந்து கொண்டு இறுக்கிறது.
இன்று உலகை ஏமாற்ற 13 ஆவது சட்டம் 13+ ஆக மாற்ற யோசிக்கிறதாம்!
இதை எல்லாம் தெரிந்தும் நாம் இன்றும் பார்த்து பேசி கொண்டிருக்கிறோம்.
எம்மண்ணில் ஆயுதம் மவுனிக்க பட்டாலும், நாம் காத்த மவுனம் சிறி லங்கா அரசு தமது செயல்பாடுகளை தொடர வாய்ப்புகளை அளித்தது.
மீண்டும் உலகம் எங்கும் பறந்து வாழும் தமிழர்கள் போர்முகம் கட்ட வேண்டிய நேரமிது.
பெப்ரவரி 4 ஆம் திகதி சிறி லங்கா சுதந்திர தினமாம்!
அன்று ஆரம்பித்தது தமிழ் இன அழிப்பு.
பெப்ரவரி 4 ஆம் திகதி பிரான்சின் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள சிறி லங்கா துதுவரகத்துக்கு அருகாமையில் மாலை மூன்று மணிக்கு, தமிழர் நாம் படை எடுப்போம்
மவுனம் கலைப்போம்-
தமிழர் போர் முகம் காட்டுவோம் வாரீர்.
அடங்காப்பற்று
வணங்காது,
பணியாது,
அடையாமல் விடாது
விடுதலை!
தமிழா!
இழிவு நமக்கு,
உரிமை முழக்கு,
போற்று விடுதலை,
மீட்பாய் நாட்டை.

