உலகத்தமிழ் இனமே நாம் உண்மையாகவே ஞாபக மறதி உள்ளவர்கள்
https://besttamillnews.blogspot.com/2012/01/blog-post_4629.html
உலகத்தமிழ் இனமே நாம் உண்மையாகவே ஞாபக மறதி உள்ளவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நி...ரூபிக்கிறோம் .எப்படி என்றால் தமிழ் இனத்தை ஒரு அறிவு சார்ந்த சமூகம் என்று உலகத்துக்கு ஓங்கி ஒழித்தவர் தான் நம் முப்பாட்டன் திருவள்ளுவர் .அவர் எழுதிய திருக்குறள் உலகம் எங்கும் பல மொழி பெயர்ப்பு செய்து தமிழன் பெருமையை உலகறிய செய்தவர் அந்த தெய்வ புலவர் திருவள்ளுவர்.
அதற்க்கு பிறகு வந்த நம் முப்பாட்டன் சோழ சக்கரவர்த்திகள் கட்டிட கலைக்கு நாங்கள் எந்த விதத்திலும் உலக மக்களை காட்டிலும் அறிவில் சிறந்தவர்கள் என்று காட்டினார்கள் கல்லணை என்ற வரலாற்று நீர் மதகை கட்டி நிரூபித்தார்கள்.அத்தோடு நின்றுவிடவில்லை.நாங்கள் தெய்வ வழிபாடுகளிலும் சிறந்தவர்கள்,யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று தஞ்சை பெரிய கோவிலில் எம்பது டன் எடையை உடைய ஒரே பாறையை மிகப்பெரிய கோபுரத்தில் உச்சியில் வைத்து சாதனை புரிந்தார்கள் நம் முப்பாட்டங்கள்.
அதற்க்கு பிறகு வந்த நடிகர் திலகம் முதல் ரகுமான் தொடர்ந்து அப்துல் கலாம் நகர்ந்து அண்ணாதுரை வரை நாம் உலகத்துக்கு தமிழன் என்ற இனம் சளைத்தவர்கள் இல்லை என்று மீண்டும் மீண்டும் உலகத்துக்கு உணர்த்தி உள்ளார்கள்.அவர்கள் தமிழனுக்கு முகவரியை எப்போதுமே கொடுத்து கொண்டுதான் இருக்கர்கள்.
ஆனால் நாம் அவர்களை வெகு சீக்கிரம் மறந்து விடுவதால் நாம் நம் முகவரியை தப்பாக டில்லி விலாசத்திற்கு எழுதி விடுகிறோம் நம் பரிமாற்றங்களை .அதனால் நமக்கு வந்து சேரவேண்டிய ஆவணங்கள் நம் முகவரியை மறந்து டில்லிக்கு சென்று விடுகிறது.அதனால் தான் எட்டு கோடி தமிழன் வாழ்ந்தும் நாம் முகவரி அற்ற தமிழனா வாழ்கிறோம்.
ஆனால் நமக்கும் சேர்த்து தமிழ் ஈழ தேசத்து மாவீரன் தன் எழுச்சி மிக்க போராட்டத்தால் இன்று பிரபாகரன் என்ற நாமத்தை உச்சரித்தால் மட்டுமே நாம் தமிழன் என்று அடையலாம் காணும் சூழல் உருவாகி உள்ளது.ஆக நமக்கு முகவரி தந்த அந்த மாவீர நம் சொந்தங்களை நாம் என்றும் நினைவில் கொள்ள ஒரு போதும் மறக்க வேண்டாம் என்று நினைவு ஊட்ட கடமை பட்டுள்ளேன்.
என்றும் அந்த மாவீர செல்வங்களை நினைவில் கொண்டு.....தமிழர்கள் விடுதலை அடைய போராடுவோம்.



