படையினருக்கு மாமா வேலை பார்த்த டக்ளஸ்!


இலங்கை இராணுவத்தை சேர்ந்த சிப்பாய்களுக்காக யாழ்ப்பாணத்தில் குறிப்பாக தீவகத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் தமிழ் யுவதிகளை விபச்சார  நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வந்திருக்கின்றார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மிக நம்பிக்கையான வட்டாரங்கள் மூலம் அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்து இருக்கின்றன.

யாழ். மாவட்ட அரச அதிபர் கே. கணேஸ் போன்றவர்கள் இத்தகவல்களை உறுதியாக தெரிவித்து இருக்கின்றார்கள்.

ஈ.பி.டி.பியினரால் இளம் யுவதிகள் பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டு ஒரு இரவிலேயெ ஐந்து, பத்து சிப்பாய்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்று கணேஸ் சொல்லி இருக்கின்றார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது ஒவ்வொரு செக்ஸ் சேவைக்கும் யுவதிக்கு தலா ஒரு டொலர் வரை சில வேளைகளில் வழங்கப்படுகின்றது என்று கணேஸ் கூறி இருக்கின்றார்.

பெண் பிள்ளைகள் பழிவாங்கப்படலாம், அவமானப்பட நேரலாம் மற்றும்  திருமண வாழ்க்கையில் பாதிக்கப்படலாம் போன்ற பயம் காரணமாக அதிகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பெற்றோர் முறையிடாமல் உள்ளனர் என்றும் மாறாக பெண் பிள்ளைகளை சிறிய வயதிலேயே திருமணம் செய்விக்கின்றனர் என்றும் கணேஸ் குறிப்பிட்டு இருக்கின்றார்.

திருமணம் ஆன பெண்கள் மீது ஈ.பி.டி.பியினர், படையினர் அதிக நாட்டம் காட்டுகின்றமைக்கு சந்தர்ப்பங்கள் குறைவு என்கிற நம்பிக்கையிலேயே பெற்றோர்  இவ்வாறான இள வயது திருமணங்களை செய்து கொடுக்கின்றார்கள் என்று விளக்கமும் கொடுத்து இருக்கின்றார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் தமிழ். சி. என். என் இற்கு கிடைத்து உள்ளன.




Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item